(Reading time: 2 - 4 minutes)

கருத்துக் கதைகள் – 26. முயற்சி - Chillzee Team

Elephant

யானைகளை பயிற்சி செய்யும் இடத்தை சுற்றி பார்க்க ஒருவர் வந்திருந்தார். அந்த இடத்தை பார்த்தவருக்கு ஒரே வியப்பு.

அவ்வளவு பெரிய உருவமுள்ள அந்த யானைகளை, அதன் ஒரு முன்னங்கால்களில் சுற்றப்பட்டிருந்த சிறு கயிற்றை மட்டும் கொண்டு கட்டி போட்டிருந்தனர்.

சங்கிலிகள், கூண்டுகள் ஹுஹும்ம்ம்ம் எதுவுமில்லை!

அந்த யானைகள் எப்போது வேண்டுமானாலும் அந்த கயிற்றை அறுத்துக் கொண்டு போய் விடலாம் என்றே தோன்றியது. ஆனால் ஆச்சர்யப் படும் விதமாக எந்த ஒரு யானையும் அப்படி செல்ல முயல்வதாகவே தெரியவில்லை.

இதை பார்த்தவருக்கு வியப்பு தாங்கவில்லை.

அப்போது அந்த பக்கம் ஒரு பயிற்சியாளர் நடந்து செல்லவும், அவரை நிறுத்தி தன் மனதில் இருக்கும் கேள்வியை கேட்டே விட்டார்!

“இந்த யானைங்க குட்டியா இருக்கும் போது இதே சின்ன கயிறுல கட்டி போடுவோம் சார். அப்போ அதுங்க சைசுக்கு அதுவே போதும்... அப்போ ஓட முயற்சி செய்தாலும் அதால இந்த கயிறை அசைக்க முடியாது. இந்த கயிறை நம்மால அறுக்க முடியாதுன்னு அதுங்க மனசுல பதிஞ்சு போயிடும். அதுக்கு அப்புறம் வருஷம் போக போக அதுங்க பெருசானாலும் அதையே உண்மைன்னு நினைச்சிட்டு கயிறை அறுக்க முயற்சியே செய்யாதுங்க...”

பயிற்சியாளர் சொன்னதை கேட்டவர் அதிசயப்பட்டார்.

அந்த யானைகளுக்கு நல்ல பலம் இருந்தது. சின்னதாக அசைந்தாலே அந்த கயிற்றை அறுத்து விடலாம் ஆனால் மனதினுள் முடியாது என்ற அவநம்பிக்கை இருக்கவே அதை முயற்சி கூட செய்யாமல் இருக்கின்றன.

 

ந்த யானைகளை போல நம்மில் பலரும் ஒரு முறை முயற்சி செய்து தோற்று போனதால் நம்மால் அதை செய்ய இயலாது என நினைத்துக் கொள்கிறோம்.

உண்மையில் தோல்வி என்பது நமக்கு ஏற்படும் பாடம். தோற்று போக பயந்தால் வெற்றியும் நம்மை தேடி வராது.

தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு, நம் வாழ்க்கையை தொடர்ந்துக் போய் கொண்டே இருக்க வேண்டியது தான் smile.

Story # 26 - Matroru vazhi

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.