(Reading time: 7 - 13 minutes)

கருத்துக் கதைகள் – 44. மிஜாரு..இஜாரு..கிஜாரு.. - தங்கமணி சுவாமினாதன்

Three monkeys

து அரசுப்பள்ளி.ஏழாம் வகுப்புக்குள் நுழைந்தார் கமலா டீச்சர்.மாலை நேர இறுதி வகுப்பு.அன்று அவ்வகுப்புக்கு நீதி போதனை அல்லது பொது அறிவு வகுப்பு.இவ்விரண்டில் எந்த சப்ஜெக்ட்டை வெண்டுமானாலும் நடத்தலாம் அவ்வகுப்பை ஏற்கும் ஆசிரியர்.

கமலா டீச்சர் உள்ளே நுழைந்ததும் வணக்கம் டீச்சர் என்ற படி எழுந்த மாணவ மாணவிகளை அமரும்படி சைகை காட்டிவிட்டு நாற்காலியில் அமர்ந்தார் கமலா டீச்சர்.கடுமையான முழங்கால் வலி டீச்சருக்கு...நல்ல வேளை அது அரசுப் பள்ளி.உட்கார நாற்காலி உண்டு.தனியார் பள்ளி என்றால் நாற்காலி கிடையாது.மேஜை மட்டுமே.நின்றபடியே பாடம் நடத்த வேண்டும்.மாணவர்கள் ஒழுங்காக கவனிக்கிறார்களா?அல்லது வேறு  ஏதும் வேண்டாத காரியங்களில் ஈடு பட்டிருக்கிறார்களா என்று கவனிக்க அவர்களைச் சுற்றிச்சுற்றி வரவேண்டும்.காலையிலிருந்து மாலைவரை ஒவ்வொரு வகுப்பிலும் இதே கதிதான் ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகளில்...நல்ல வேளை கமலா டீச்சர் அரசுப் பள்ளி ஆசிரியை.வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சியோடு பணி செய்பவர்.

பசங்களா..இதப் பாருங்க...என்றபடியே பையிலிருந்து ஒரு பொம்மையை வெளியே எடுத்து எல்லா மாணவ மாணவியருக்கும் தெரிவது போல் தூக்கிப் பிடித்துக் காண்பித்தார் கமலா டீச்சர்.அது மூன்று குரங்குகள் பொம்மை.இரு கைகளாலும் கண்களைப் பொத்தியபடி ஒரு குரங்கும்,இரு காதுகளையும் பொத்தியபடி ஒன்றும்,இரு கைகளாலும் வாயைப் பொத்தியபடி ஒன்றுமாய் மூன்று குரங்குகள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

கருத்துக் கதைகள் – 43. பணம் பத்தும் செய்யும்.. - தங்கமணி சுவாமினாதன்

படிக்க தவறாதீர்கள்...

கொரங்கு பொம்ம...கத்தினார்கள் பசங்கள்....

யார் வீட்டிலாவது இந்த பொம்மை இருக்கிறதா?இருப்பவர்கள் கை தூக்குங்கள்....

யாரும் கை தூக்கவில்லை.

சரி...இந்த பொம்மையை இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா?

பாத்துருக்கோம் டீச்சர்...

வெரி குட்.இந்த மூன்று குரங்குகள் பொம்மய...நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த ஒரு தலைவருக்கு ரொம்பப் பிடிக்கும் அவர் யாரு..சொல்லுங்க பாக்கலாம்...

யாரிடமிருந்தும் பதில் இல்லை...

அவரு நம்ம நாட்டு தேசப் பிதா...இப்ப சொல்லுங்க...

காந்தியடிகள்....கோரஸாய்க் கத்தினர் மாணவர்கள்...

வெரி குட்..காந்தியடிகளோட முழுப் பெயர் யாருக்காவது தெரியுமா?....

.................

நானே சொல்றேன்....மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி..எங்க சொல்லுங்க....

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி....ஒன்றாய்க் கத்தினார்கள் மாணவர்கள்...

சரி..இதோ இருக்கே இந்த பொம்மையில இருக்குற கொரங்குங்களோட பெயருங்க ஒங்குளுக்குத் தெரியுமா?

தெரியாது டீச்சர்...

அப்ப நான் சொல்றேன் எழுதிக்குங்க...இரண்டு கைகளாலும் கண்கள மூடிக்கிட்டு ஒக்காந்திருக்குற குரங்கோட பேரு...மிஜாரு...காதுங்கள பொத்திக்கிட்டு இருக்குற குரங்கோட பேரு...இஜாரு.. வாயப் பொத்திக்கிட்டு இருக்குற குரங்கோட பேரு...கிஜாரு... என்ன பசங்களா எழுதிக்கிட்டீங்களா?படிங்க குரங்குங்களோட பேர...

மிஜாரு..இஜாரு...கிஜாரு..சத்தமாய்ப் படித்தனர் மாணவ மாணவியர்...

வெரி குட்...மூணு குரங்குங்களும் ஏன் அப்படி ஒக்காந்திருக்குங்க தெரியுமா... கண்கள பொத்திக்கிட்டு இருக்குர குரங்கு...தீயவற்றைப் பார்க்காதே அப்பிடின்னு சொல்லுது.. காதுகளைப் பொத்தியிருப்பது..தீயவற்றைக் கேட்காதே அப்பிடீங்குது.. வாயப் பொத்திக்கிட்டு இருக்குறது..என்ன சொல்லுது சொல்லுங்க...

தீயவற்றைப் பேசாதே அப்பிடீங்கிது டீச்சர்...

குட் குட் சரியா சொல்லிட்டீங்களே.....வெரி குட்..

கண்களப் பொத்தியிருக்குற குரங்கு அப்பிடி பொத்திக்கக் காரணம் ஒரு கத...அத... சொல்லட்டுமா?..

ஊஊஊஊஊஊஊஊஊ..கதை..கதை.... சொல்லுங்க டீச்சர்.....

து ஒரு ரயில்வே ஸ்டேஷன்.ஜங்ஷன் என்பதால் அங்கும் இங்குமாய் ட்ரைன் கள் நிற்பதும் போவதும் வருவதுமாய் எப்போதும் பயணிகளின் கூட்டமுமாய் இருக்கும்.அந்த ரயில் நிலையத்தில் குரங்குகளின் கூட்டமும் அவற்றின் அட்டகாஸமும் மிகுந்திருந்தது.வருவோர் போவோர் விட்டுச் செல்லும் உணவுப் பண்டங்கள்,தட்டிப் பறித்துத் தின்னும் தின் பண்டங்களாலும் அவற்றின் வயிறு நிரம்பியதால் அவை அங்கேயே முகாமிட்டிருந்தன.அவற்றில் மூன்று குரங்குகள் இணைபிரியா நட்போடு இருந்தன. அவை ஏதாவது ஒரு ரயிலில் ஏறும்... பயணிகள் போடும் உணவுப் பண்டங்களைத் தின்னும் வயிறு நிரம்பியதும் வழியில் வரும் ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்கும் எதிப்புரமாய் வரும் ரயிலில் ஏறி மீண்டும் பழைய இடமான ஜங்ஷனுக்குத் திரும்பிவிடும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.