(Reading time: 3 - 6 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 3. ராமனின் சாமர்த்தியம்

புகழ் பெற்ற அறிஞர் ஒருவர் இருந்தார். அவர் கல்வியில் சிறந்தவர், அனைத்து மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

  

மன்னர் கிருஷ்ணதேவ ராயரின் அரசவையில் இருக்கும் அறிஞர்களை விவாதத்தின் மூலம் வெல்ல அவர் விஜயநகரத்துக்கு வருகை தந்தார்.

  

விஜயநகரில் உள்ள அறிஞர்கள் இந்த பண்டிதரை எதிர்கொள்ள தயங்கினார்கள். அவர்கள் அறிஞருக்கு சமமானவர்கள் இல்லை என்று உணர்ந்தார்கள். அதற்காக அவர்கள் சவாலை ஏற்க மறுத்தால் அரசர் கோபப் படுவார் என பயந்தார்கள். அவர்களில் ஒருவர், “நாம் ராமனிடம் பேசலாம். நிச்சயமாக, அவர் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பார்” என்றார்.

  

அறிஞர்கள் ராமனை அழைத்து நிலைமையை விளக்கினர். ராமன் தானே சவாலை எதிர் கொள்வதாக உறுதியளித்தான்.

  

"ஒரே ஒரு நாள், நீங்கள் என்னை உங்களின் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்," என்று ராமன் கூறினான். மற்ற அறிஞர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டனர்.

  

அடுத்த நாள், அறிஞர்கள் ராமனை ஒரு பல்லக்கில் அரண்மனை மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். ராமனும், அந்த அறிஞரும் எதிரெதிரே அமர்ந்தனர்.

  

இரண்டு அறிஞர்கள் பட்டு துணியால் மூடப்பட்ட ஒரு பெரிய மூட்டையை சுமந்து மண்டபத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் மூட்டையை ராமனுக்கு அருகில் வைத்து வணங்கினார்கள்.

  

ராமன் தன் கையை மூட்டையில் வைத்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.