(Reading time: 2 - 4 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 6. ஏமாற்றாதே

ரு விவசாயின் பண்ணைக்கு தண்ணீர் தேவைப்பட்டது.

  

அதற்காக பக்கத்து வீட்டுக் காரரிடம் இருந்து ஒரு கிணற்றை வாங்கினார்.

  

பக்கத்து வீட்டுக்காரர் தந்திரமானவர். கிணற்றை விற்றப் பிறகு விவசாயி கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தார்.

  

ஏன் என்று விவசாயி கேட்டதற்கு, "கிணற்றை தான் உனக்கு விற்றேன், தண்ணீரை அல்ல" என்று பதிலளித்து விட்டு நடந்தார்.

  

மனமுடைந்த விவசாயிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே அவர் ஒரு தீர்வுக்காக தெனாலிராமனிடம் சென்றார்.

  

தெனாலிராமன் விவசாயி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து, எதனால் அவர் விவசாயியை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை என்று கேட்டார்.

  

தந்திரமான மனிதர் மீண்டும் சொன்னதையே சொன்னார்.  “நான் கிணற்றை விற்றேன், தண்ணீரை அல்ல. அதனால் அவர் என் தண்ணீரை எடுக்க முடியாது.”

  

அதற்கு தெனாலிராமன், “நீ சொல்வது எனக்கும் சரியாக தான் படுகிறது. ஆனால் நீ கிணற்றை விற்று விட்டாய். இதற்கு மேல் உன்னுடைய சொத்தான தண்ணீரை அங்கேயே வைத்திருக்க உனக்கு அனுமதி இல்லை. எல்லா தண்ணீரையும் அகற்றி விடு. இல்லையென்றால் அந்த தண்ணீர் கிணற்றை வாங்கிய விவசாயிக்கே சொந்தம்” என்றார்.

  

தன் கசப்பு மருந்து தனக்கே கொடுக்கப் பட்டு விட்டதை புரிந்துக் கொண்ட மனிதர் மன்னிப்பு கேட்டு விட்டு சென்றார்.

  

கருத்து

  

ஏமாற்றுவதால் எதுவும் கிடைக்காது. நீங்கள் தெரிந்தே ஏமாற்றினால், அதற்கான தண்டனை உங்களை தேடி வந்து சேரும்!

  

------------

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.