(Reading time: 3 - 6 minutes)

ஊய் ஊய் என்று, காற்று வீசத் தொடங்கியது. தெருவில் கைத்தடி ஊன்றித் தள்ளாடி நடந்து செல்லும் கிழவனின் மேல் சட்டையைத் தன் ஊங்காரப் பாய்ச்சலால் கழற்றி எறிய முயன்றான் காற்றண்ணன்.

  

கிழவனுக்கு மூச்சுப் பொறுக்கவில்லை. கைத் தடியைக் கீழே போட்டான். தெருவோரத்தே இருந்த ஒரு ஒதுப்புறமான இடத்தில் போய் முடங்கிக் கொண்டான். தன் மேல் சட்டையை இழந்துவிடாமல் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.

  

காற்று மேலும் வேகமாக வீசியது. கிழவன் குளிர் தாங்கமுடியாமல் தன் கைகளை உடலில் பதித்து மூடிக் கொண்டான்.

  

காற்று வேகம் மிக மிக , அவன் கையின் அழுத்தம் மிகுந்தது. சட்டையை இழுத்து இழுத்துப் போர்த்துக் கொண்டபடி அவன் தன் உடலோடு அணைத்துக் கொண்டான்.

  

ஒரு மணி நேரம் ஊய் ஊய் என்று ஊதிய காற்று ஓய்ந்தது. கதிரவனிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டது.

  

"நான் தோற்றுவிட்டேன். நீ உன் வல்லமையைக் காட்டு'' என்றான் காற்றண்ணன்.

  

அதுவரையில் மேகங்களுக்குப் பின்னே ஒளிந் திருந்த கதிரவன் வெளியில் வந்தான்.

  

கிழவன் உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கினான். நேராக அந்தக் கிழவன் மீது தன் கதிர்களை வீசினான்.

  

சிரித்த முகத்தோடு தன் ஒளிக் கதிர்களை அவன் கிழவன் மீது செலுத்தினான்.

  

கிழவனின் குளிர் அகன்றது. வெயில் ஏற ஏறப் புழுக்கம் மிகுந்தது. முதலில் முடங்கியிருந்த கைகளை அகற்றியவன். சிறிது நேரத்தில் வேர்க்கத் தொடங்கி யதும் மேல் சட்டையைக் கழற்றிப் பக்கத்தில் போட்டான். மேலும் வெப்பம் மிகவே உள் சட்டையையும் கழற்றிப் போட்டான். வியர்வையைத் துடைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.