குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கருமித்தனமும் சிக்கனமும் - டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம்
பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார்.
அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்ற போது, அங்கே -
வேலைக்காரனைக் கையை மடக்கி மரத்தில் வைத்துக் கட்டி - குத்து 10 குத்திக் கொண்டிருந்தான் செல்வன். ‘ஏன் இப்படி’ - என்று அருகில் உள்ளவரைக் கேட்க,
“வேலைக்காரன் கடையில் பருப்பு வாங்கி வரும் போது வழியில் 10 பருப்பு சிந்திவிட்டானாம், அதற்காக 10 குத்துகள் அவனைக் குத்திக் கொண்டிருக்கிறான் செல்வந்தன்” என்றான்.
- இது கேட்டதும், மவுல்வி பயந்து, பணம் கேட்காமலே திரும்பி வந்து விட்டார்.
பின், நபி பெருமானார் மவுல்லியை ‘செல்வன் எவ்வளவு கொடுத்தான்?’ என்று கேட்க,
“அங்கே செல்வன், தன் வேலைக்காரன் பத்து பருப்பு சிந்தியதற்குப் பத்து குத்து குத்திக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துப் பயந்து நான் கேட்காமலே திரும்பி வந்து விட்டேன்" - என்றார்.
“இப்போது போய்க் கேளும்” - என்று நாயகத்தின் கட்டளை பிறந்தது.
மவுல்வி - சிறு நடுக்கத்துடன் அப் பணக்காரனிடம் போனார். அப்போது அங்கே, அவன்,
ஒரு வேலைக்காரனைத் தூணிலே கட்டிவைத்து சவுக்காலே அடித்து - 10 சொட்டு இரத்தம் எடுக்க அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அது என்ன என்று பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்க,
‘அவன் எண்ணெய் வாங்கி வரும்போது 10 சொட்டு சிந்திவிட்டான். அதற்கு அவன் உடலிலே ரத்தம் 10 சொட்டு எடுக்கச் சவுக்கால் அடிக்கிறார்கள்' -