(Reading time: 5 - 9 minutes)

  

அதே தூரத்து ஊருக்கு பேருந்து (பஸ்) போகிறது என்றால் 50 காசு கொடுத்து அதில் ஏறிப் பயணம் செய்வது ‘சிக்கனம்’.

  

அதுவும் கொடுப்பது ஏன் என்று 5 காசுக்கு அவல் கடலை வாங்கித் தின்று கொண்டே நடப்பது ‘கருமித்தனம்’

  

ஐநூறு, ஆயிரம் ரூபா என்று விலையுள்ள பட்டாடை புடவைகளை வாங்கிக் கட்டி வாழ்வது ‘டம்பம்’

  

தூய்மையான எளிய - அழகான ஆடை (புடவை) அணிவது ‘சிக்கனம்’.

  

அப்படியின்றி, அழுக்குடையும் கிழிசல் துணியும் தையல் தெரியும்படி உடுத்திக் கொண்டே இருப்பது ‘கருமித்தனம்’.

  

இவ்வாறாக, நமக்கு ஏற்ற முறையில் நம் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டால், நம் வாழ்விலே ஒளியும் மகிழ்ச்சியும் உண்டாகும், -

  

இதற்கும் இலக்கணம் உண்டு.

  

அஃது - தேவைக்கு மேல் செலவு செய்வது ‘இடம்பம்’

  

தேவையின் அளவு செலவு செய்வது ‘சிக்கனம்’

  

தேவைக்கும் செலவு செய்யாதது ‘கருமித்தனம்’

  

இதிலிருந்து சிக்கனம் எது?

  

கருமித்தனம் எது? - என்று நமக்கு நன்றாகப் புரிகின்றது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.