(Reading time: 8 - 16 minutes)

காவல் வீரர்கள் தங்க வயலுக்குச் சென்றார்கள். குடியானவனிடம் மன்னர் அழைத்துவரச் சொன்ன செய்தியைக் கூறினார்கள்.

  

நடந்த செய்திகளை அறிவாளன் அந்தக் காவல் வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். தன் வீட்டிலிருந்து சில பொருள்களை எடுத்துக் கொண் டான். காவல் வீரர்கள் கொண்டு வந்திருந்த குதிரை வண்டியில் ஏறிக் கொண்டான். அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.

  

அறிவாளன் ஒரு ஏழைக் குடியானவன் தான். ஆகையால் அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே அரசருக்கு அவன் மீது நல்ல நம்பிக்கை உண்டாயிற்று.

  

அய்யா அறிவாளரே! பொன்னி நாட்டில், அதுவும் அரண்மனையில் ஒரு திருட்டு நடந்திருப்பது பெரிய அவமானமாய் இருக்கிறது. இங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவரும் உயர் குலத்தைச் சேர்ந்த வர்கள். பொய்யான குற்றச்சாட்டைக் கூறினால் அது அவர்கள் பிறந்த குலத்துக்கே அவமானமாகும். ஆகையால், இதில் நீங்கள் உண்மையான குற்றவாளி யைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். வெறும் அய்யத் தில் ஒருவரைக் குற்றம் சாட்டக்கூடாது, என்று மன்னர் விளக்கமாகக் கூறினார்.

  

"அரசே! நல்லவர்கள் மீது குற்றம் சாட்டக் கூடாது என்ற தங்கள் உயர்ந்த நோக்கத்தைப் பாராட்டுகிறேன். இவ்வளவு உயர்ந்த பண்புள்ள அரசரின் அரண்மனையில் திருட நினைத்த ஒரு கயவனும் நம் நாட்டில் இருக்கிறானே என்று

  

நினைத்து வேதனைப்படுகிறேன்!'' என்று கூறிய குடியானவன், அரசரைப் பார்த்து, "அரசே! மந்திர வித்தையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா!'' என்று கேட்டான்.

  

"மந்திரங்களில் எனக்குச் சிறிது கூட நம்பிக்கை கிடையாது. மந்திரம் மாயம் என்பதெல்லாம் ஏமாற்று வித்தை '' என்று கூறினான் அரசன் பூவேந்தன்.

  

"அதுதான் தவறு. அரசே! இப்பொழுது மாய மந்திரத்தின் மூலமாகவே நான் இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்கப் போகிறேன். நான் கண்டு பிடிக்கா விட்டால், தாங்கள் எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் கண்டு பிடித்துக் கொடுத்தால் எனக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.