(Reading time: 4 - 7 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - எப்பொழுது விளையாடலாம்? - ரேவதிசிவா

Kids

ன்ன நண்பர்களே! என்னோட கேள்விக்குப் பதில் சொல்லுங்க.

இதென்ன கேள்வி, கோடை விடுமுறை வந்துட்டது, இனிமேல் எப்பவும் விளையாட வேண்டியதுதான்!

ஓகோ! அப்படியா! சரிசரி.எல்லாரும் எப்ப மருத்துவர் கிட்டப் போகலாம்?

உனக்கு என்னதான் ஆச்சு சிவா? நாம் ஏன் டாக்டர் கிட்டப் போகனும்?

அட, இது தெரியாமலா, எப்பவும் விளையாடப் போறேன்னு சொன்னீங்க.

தெளிவா சொல்லு நீ, நாங்க விளையாடுவதற்கும் டாக்டரப் பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம்?

ஓகே! தெளிவாவே சொல்றேன்.அதுக்கு முன்னாடி இன்னொரு கேள்வி, இதற்கு சரியா பதில் சொன்னாதான், நான் உங்களோடக் கேள்விக்குப் பதில் சொல்வேன்.

(இந்த சிவா தொல்லை தாங்க முடியலை.ஒரே கேள்விகளா கேட்டு துன்புறுத்துறா! சரி, என்ன தான் சொல்றானுப் பார்ப்போம்)

சரி, கேளு.

நாம் ஒரு செடி நடரோம், அதுக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊத்தறோம்,ஆனா அந்த செடி வளரவே இல்லை,காய்ந்துப் போயிடுத்து. அது ஏன்?

எனக்கு தெரியும். அந்த சூழல் அதற்கு பொருத்தமானதாக இருந்திருக்காது. எங்கள் ஆசிரியர் சொல்லியிருக்காங்க, எல்லா தாவரமும் எல்லா நிலையிலும் வளராது. சிலதுக்கு வெப்பம் அதிகம் தேவைப்படும், சிலதுக்கு குளிர்ச்சி அதிகம் தேவைப்படும்.நாமளும் அந்த தாவரத்தின் தன்மைக்கேற்பான இடத்தில் நட்டு வளர்க்கனும்.என்னோட பதில் சரியா?

ம். சரிதான். அதுமாதிரிதான் நாமும். நம்ம உடல்நிலையின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப, நம்மைப் பாதுகாத்துக்கனும். குளிர் காலத்தில் எப்படி ரெயின் கோட், கம்பளி பயன்படுத்துறோமோ அதுமாதிரி வெயில் காலத்திலும் பயன்படுத்தனும். பருத்தி ஆடை உடுத்தனும், குளிர்ச்சியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளனும்.

இருஇரு! இதுக்கும் நாங்க விளையாடுவதற்கும் என்ன சம்பந்தம்?

பொருப்பா! நீங்க எங்க விளையாடப் போவீங்க?

பூங்காக்கும், விளையாட்டு மைதானத்திற்கும். அதுக்கென்ன?

இப்ப வெப்பம் எவ்வளவு கடுமையா இருக்கு என்று தெரியுமா? நீங்க நல்லா இந்த வெயில்ல விளையாடினா, உங்க நீர்சத்துக் குறைவதோடு மட்டுமில்லாமல், சர்மம் தொடர்பான நோய்களும் வரும். பின் சூட்டினால் கட்டிகள் மற்றும் வயிற்று வலி வந்து அவதிப்படுவீர்கள். நீங்கள் கஷ்டப்படுவதோடு , உங்களின் பெற்றோர்களையும் கவலையடையச் செய்வீர்கள்.

இப்ப சொல்லுங்க, நாள் முழுவதும் இவ்வெய்யிலில் விளையாடினால், நீங்க டாக்டரப் பார்த்துத்தானே ஆகனும்.

ஆமாம் சிவா. நீ சொல்லறது இப்பதான் புரியுது.அப்ப நாங்க விளையாடவே முடியாதா?

உங்களுக்கு நம்ம பாரதியார் தெரியும்தானே?

ஓ! தெரியுமே. பாப்பா பாட்டுக்கூட நாங்க படிச்சிருக்கோமே!

அந்த பாட்டில் உங்களைப் போன்ற பிள்ளைகளுக்கென்றே பல நல்ல பண்புகளை நம்ம பாரதியார் சொல்லி இருக்கிறார்.அதில் வரும் நாலு வரியை நான் பாடுறேன் .

என்ன நீ பாடுறீயா? அப்ப நாங்க வீட்டுக்குப் போறாம்.

சரிசரி. ரொம்பப் பண்ணாதீங்கப் பா. அந்த வரிகளைப் படிக்கிறேன் போதுமா. அதில் உங்கள் கேள்வி மற்றும் என் கேள்விக்கான விடையும் உள்ளது.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு - என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

இப்ப புரியுதா நண்பர்களே! மாலை நேரத்தில் விளையாடுவதுதான், உடலிற்கு நல்லது.இல்லை நாங்கள் விடுமுறையில் பகலில்தான் விளையாடுவோம் என்றால், மரங்களின் அடியில் அதன் நிழலில் விளையாடுங்கள் இல்லை Indoor games எனப்படும் உள் விளையாட்டுகளைப் பகலில் விளையாடுங்கள்.வெளி விளையாட்டுகளை மாலையில் விளையாடுங்கள்.

ஓகே சிவா. எங்களுக்காகவும் எங்கப் பெற்றோர்களுக்காகவும் நீ சொன்னப்படியே செய்கிறோம்.

நீங்க நல்ல பிள்ளைகள் என்பதை நிறுபித்துவிட்டீர்கள்!

இவர்கள் நிறுபித்துவிட்டார்கள். அப்பொழுது நீங்கள்?

Kids

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.