(Reading time: 3 - 5 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் நல்லவர்கள்? - ரேவதிசிவா

Bad and good

ஹேய் குண்டம்மா! என்ன சோகமா இருக்க? உன்ன யாரும் கண்டுக்கவே இல்லையா? நான் சொன்னமாதிரி யாரும் உன்னை வாங்கவே இல்லை பார்த்தியா! தனியா இருந்தாலாவது ஒரு சிலர் உன்னை வாங்குவாங்க, எங்க பக்கத்தில் இருந்தால் யாரும் உன்னை பார்க்கவே மாட்டாங்க!என்று வெள்ளை நிற பாவையான ஐஸ்கிரீம், தர்பூசணியைப் பார்த்து கிண்டல் செய்தது.

வெள்ளைக்காரியின் கிண்டலினால் மனம் வருந்தினாள் நம் பூசணி.

நம் நண்பர்களை யாராவது கேலி செய்து புண்படுத்தினால்,நாம் சும்மா இருப்போமா? இல்லைதானே.நாம் நம் நண்பர்களுக்கு ஆதரவாய் அவர்களிடம் வாதம் செய்யப் போய்விடுவோம் அல்லவா?அதேமாதிரி,பூசணியின் நண்பனான நம் பச்சைக்காரி இளநீர், பக்குமாய் பரிந்து வந்தாள், தன் தோழிக்காக!

அனல்ல உருகிப் போற நீ! என் தோழியைப் பற்றிப் பேசக்கூடாது.உன்னை சாப்பிட்டா என்ன சக்தி கிடைக்கும்? ஒன்றும் கிடைக்காது. நீ தான் சுத்த வேஸ்ட். என்னோட தோழிக்கிட்ட எவ்வளோ எனர்ஜி இருக்கு தெரியுமா? வெயில் காலத்தில உன்ன சாப்பிட்டு அவதிப்படறத விட, என் தோழியை சாப்பிட்டா எல்லா நல்ல பயன்களையும் தருவாள். உடல் சூட்டைக் குறைப்பாள். இந்த மக்களுக்கு உண்மை தெரிந்தால்,உன்னைப் போய் வாங்குவாங்களா?

உண்மையால் உருகிவிட்ட ஐஸ்கிரீம் தலைக்குனிய, இல்லை இல்லை! கப்போடு கவுற, உதவிக்கு வந்தாங்க கேடு நண்பர்கள்!

ஆமாம் நண்பர்களே! யாராவது திருந்தினால், அவர்கள் கூட இருக்கும் சிலருக்குப் பிடிக்காதே! அதுப்போல் வெள்ளைக்காரியுடன் பல வண்ணகளில் இருக்கும் குளிர்பானங்களுக்கு நம் பசுமையின் உண்மையானப் பேச்சுப் பிடிக்கவில்லை. அதனால் அவைகள் கூட்டாகச் சேர்ந்து வாதப்போர் புரிந்தன.

ஹேய் நிறுத்து! என்ன ரொம்பப் பேசுற? நாங்க எவ்வளவு கலர்புல்லா இருக்குகோம்,அதுவே உன்னப் பாரு கொஞ்சம் கூட கலரே இல்லை! சரி,ஈர்க்கும்படியான பாட்டிலிலாவதில் இருக்கியா? அதுவும் இல்லை! ஒரு குட்டி அண்டா மாதிரி இருக்கிற உன்னை, தூக்கிக் குடிக்கிறதே கஷ்டம்! உன்னை வாங்கிற காசுக்கு எங்களையே இரண்டு மடங்கு வாங்கலாம்.நீ முதல்ல உன்னைப் பாரு அப்புறம் உன்னோட ப்ரண்டுக்கு ஒத்து ஊத வா!

கடுகு சிறுத்தாலும் காரம் குரையாது என்பதற்கேற்ப, இவ்வளவு நேரம் நடந்த வாதங்களைக் கேட்ட நம் குட்டிப் பொண்ணு எலும்பிச்சைப் பழம்,தன்னோட தோழர்களைக் காப்பாத்த பல்டி அடித்து உருண்டோடி வந்து களத்தில் குதித்தது.

இவள் ஒரு ஒற்றை வரியில் இவர்களை தலைத்தெரிக்க ஓட வைச்சா,பின் தன் நண்பர்களோடு இணைந்து கும்மாளம் போட்டாள்.

சரி, அந்த ஒற்றை வரி என்ன என்பதை கண்களை மூடிக்கொண்டு யோசிக்கவும்!

1

2

3

4

5

அது இதுதான்!

உங்களை உண்டால் உடலிற்கு ஆபத்து என்பதை மக்கள் அனைவரும் அறிந்துக்கொண்டனர்.

இனிமேல் இதைப் போய் யாராவது வாங்குவார்களா நண்பர்களே! உடலிற்கு உபாதை தருபவைகளை யாரேனும் விலைக்கொடுத்து வாங்கி பின்பு வருந்துவாறா?

இப்பொழுது நீங்களே சோல்லுங்கள்! யார் நமக்கு நல்லவர்கள் என்று?

எனக்கு இளநீர்,எலும்பிச்சைப் பழம்,தர்பூசணிதான் நல்லவர்கள். உங்களுக்கு நண்பர்களே?

Bad and good

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.