(Reading time: 6 - 12 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - வாய்மையே வெல்லும் - அக்ஷயா

kids-running-race

ந்த பெரிய தனியார் பள்ளிக்கூடம் விழா முகம் பூசிக் கொண்டிருந்தது.

அன்று பள்ளியின் விளையாட்டுத் தினம்.

போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் ஒரு பக்கம் ஆயத்தத்தில் இருக்க, போட்டியை காண காத்திருந்த மற்ற மாணவர்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை சுற்றி இருந்த சிமன்ட் படிகளில் ஆரவாரம் செய்த படி அமர்ந்திருந்தனர்.

சுற்றி நடப்பது எதையும் கவனிக்காமல் மும்முரமாக பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தான் சுரேஷ்.

அன்று நடக்கும் மாரத்தான் போட்டியில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்பது அவனின் ஆசை.

ஆசைப்படுவதோடு நிறுத்தி விடாமல் ஒரு வருடமாகவே தொடர்ந்து கடினமான பயிற்சியும் செய்து வருகிறான் சுரேஷ்.

“என்னப்பா சுரேஷ், இன்னும் நீ போட்டிக்கு தயாரகலையா?” கேலியாக கேட்டபடி சுரேஷை வம்புக்கு இழுத்தான் கதிரவன்.

கதிரவனுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பாதவனை போல ஒரு புனன்கையை மட்டும் பதிலாக கொடுத்து விட்டு தன் பயிற்சியை தொடர்ந்தான் சுரேஷ்.

கதிரவனும் அன்று அதே மாரத்தான் போட்டியில் பங்குப்பெற இருப்பவன் தான்.

சுரேஷை போலவே கதிரவனும் அன்றைய போட்டிக்காக கடுமையாக பயிற்சி எடுத்திருந்தான்.

அவர்கள் இருவரில் ஒருவர் தான் அந்த போட்டியில் வெல்வார்கள் என்று அவர்களின் வகுப்பு மாணவர்கள் பேசிக் கொண்டார்கள்.

சுரேஷிற்கு போட்டியில் வெல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது என்றால் கதிரவனுக்கு வெறி இருந்தது!

அன்றைய போட்டியில் எப்படியாவது சுரேஷை வென்று பதக்கம் வென்று விடுவது என்று முடிவு செய்திருந்தான்.

ஒருவேளை சுரேஷ் அவனை வெல்வது போல தோன்றினால் அவனை வஞ்சகமாக வீழ்த்த ஒரு திட்டத்தையும் யோசித்து வைத்திருந்தான்.

அவர்கள் பங்கேற்க போவது மாரத்தான் போட்டி என்பதால் அவர்களின் பள்ளி மைதானத்தை சுற்றி ஐந்து முறை ஓட வேண்டும்.

போட்டியின் ஆரம்பம் முதலே வேகமாக ஓடி முன்னிலையில் இருப்பது கதிரவனின் பாணி.

இறுதி சுற்று வரும் போது வேகமெடுத்து முன்னேறி வெல்வது சுரேஷின் பாணி!

இதை நன்கு அறிந்திருந்த கதிரவன், ஐந்தாவது சுற்றின் போது சுரேஷ் அவனை முந்த முயற்சி செய்தால் அவனை தடுக்கி கீழே விழ வைப்பது என முடிவு செய்திருந்தான்.

பள்ளி கட்டிடத்தின் பின்னே ஓடும் போது ஒருவர் பார்வையிலும் அவர்கள் பட மாட்டார்கள் என்பதும் அவனுக்கு தெரியும். 

லைமை ஆசிரியர் வந்த உடன் விளையாட்டு போட்டிகள் இனிதே தொடங்கியது.

ஒவ்வொரு விளையாட்டாக நடக்க, மாரத்தான் போட்டி நடக்கும் முறையும் வந்து சேர்ந்தது.

அங்கே போட்டி ஒருங்கிணைப்பாளராக இருந்த சுரேஷின் வகுப்பாசிரியர் குமரேசன், சுரேஷிற்கு சின்ன சின்ன குறிப்புகளை கொடுத்து விட்டு, நன்றாக ஓடி பரிசு பெறுமாறு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதை எல்லாம் பார்த்த கதிரவனுக்கு கோபம் பொங்கியது! ஆனாலும் கோபத்தை அடக்கி கொண்டு நின்றான்.

தொடர்ந்து போட்டிக்கான விதிமுறைகளை அறிவித்தார்கள். விசில் அடித்த உடன் ஓட வேண்டும். அவரவர் ட்ராக்கில் தான் ஓட வேண்டும் என்பன போல பல விதிமுறைகள்.

பின், போட்டி தொடங்குவதற்கான விசில் அடிக்கப்பட, போட்டியாளர்கள் ஐந்து பேரும் ஓட தொடங்கினார்கள்.

கதிரவன் எப்போதும் போல முன்னிலை பெற்று ஓடிக் கொண்டிருந்தான்.

ஐந்தாவது சுற்றும் வந்து சேர்ந்தது!

அதுவரை மூன்றாம் இடத்தில இருந்த சுரேஷ் மெல்ல தன் வேகத்தை கூட்டினான்.

அவனுக்கும் கதிரவனுக்கும் இடையே இருந்த தூரம் மெல்ல குறைந்து வந்தது. அதே நேரம் அவர்கள் இருவருக்கும் மற்ற மூன்று போட்டியாளர்களுக்கும் இடையே இருந்த தூரம் அதிகமாகி கொண்டே சென்றது.

சுரேஷ் தன் அருகே வந்துவிட்டதை உணர்ந்த கதிரவன், பள்ளி கட்டிடத்தின் பின்னே ஓடும் போது, தன் திட்டத்தின் படி மெல்ல வேகத்தை குறைத்தான்.

அதை எதையும் கவனிக்காத சுரேஷ் வேகமாக ஓடி கதிரவனை தாண்ட நினைத்த நேரத்தில் என்ன ஏது என்றே புரியாத விதத்தில் தடுமாறி கீழே விழுந்திருந்தான்.

கதிரவன் திட்டமிட்டது போலவே தன் காலைக் கொண்டு சுரேஷை தடுக்கி விழ செய்திருந்தான்.

சுரேஷ் நம்ப முடியாமல் நிலைக் குலைந்திருக்க, கதிரவன் அவன் பக்கம் ஒரு கேலி பார்வையை கொடுத்து விட்டு வேகமெடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.