(Reading time: 2 - 3 minutes)
Evil will eventually die - a hurtful obituary in a newspaper
Evil will eventually die - a hurtful obituary in a newspaper

வினோத செய்திகள் - தீயசக்தி இறுதியில் இறந்துவிடும் - செய்தித்தாளில் வெளியான மோசமான இரங்கல் செய்தி.

டந்த வாரம் ப்ளோரிடா மாகாண செய்தித் தாள் ஒன்றில் ஒரு அசாதாரண இரங்கல் செய்தி வெளியானது. மற்ற இரங்கல் செய்திகளைப் போல இறந்தவரின் இறப்பை பற்றிய வருத்தத்தையோ அவரின் வாழ்க்கைப் பற்றிய  கொண்டாட்டமாகவோ அல்லாது, இது அவரின் மரணத்தை கொண்டாடியது.

  

"சிறு வயதிலிருந்தே, அவர் பெண்கள் பின்னே சுற்றுபவர் மற்றும் மோசமான குடிகாரர். அவர் அழிவின் பாதையில் தனது உறுதிப்பாட்டை உறுதிப் படுத்தினார். தன் குழந்தைகளின் வாழ்வை சேதப்படுத்தினார், அவர்களை பணமில்லாதவர் ஆக்கினார்" என்றும் அந்த இரங்கல் செய்தி கூறுகிறது.

  

அதிர்ச்சியூட்டும் இந்த இரங்கலில், இறந்த Lawrence H. Pfaff Sr என்பவரின் மறைவு "தீய சக்தி இறுதியில் இறந்துவிடும் என்பதை நிரூபிக்கிறது" என்று சொல்லப் பட்டிருக்கிறது.

  

இந்த இரங்கல் செய்தியை வெளியிட தோராயமாக பதிமூன்றாயிரம் ரூபாய் (167.83 அமெரிக்க டாலர்கள்) செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது! இதை வெளியிட்டவருக்கும் இறந்தவருக்கும் எந்த வகையில் உறவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.