(Reading time: 2 - 3 minutes)
The woman who accounted for the unborn baby as a fellow passenger!
The woman who accounted for the unborn baby as a fellow passenger!

வினோத செய்திகள் - வயிற்றில் இருக்கும் குழந்தையை சக பயணியாக கணக்கு காட்டிய பெண்!

மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் சாலைகளில் HOV Lanes எனப்படும்  high occupancy vehicle lanes மிகவும் பிரபலம். அப்படி இருக்கும் HOV பாதைகளில் மோட்டார் சைக்கிள்கள், பேருந்து போன்ற வெகுஜன போக்குவரத்து மற்றும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட (2+) ஆக்கிரமிப்பாளர்களைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

      

சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பெண் தனியாக காரில் செல்லும் போது HOV Lane பயன்படுத்துவதை ஒரு போலீஸ்காரர் கவனித்தார். உடனடியாக அந்த காரை நிறுத்தி ஃபைன் போட விசாரித்தார்.

  

தன் மகனை ஸ்கூலில் இருந்து அழைத்துச் செல்ல தாமதமாகி விட்டதால் HOV Laneல் வந்துக் கொண்டிருந்த அந்தப் பெண், தன் காரிலும் இரண்டுப் பேர் இருப்பதாக சொல்லி தன் வயிற்றை சுட்டி காண்பித்து போலீஸை திகைப்படைய செய்தார் அந்தப் பெண். விசாரித்ததில், அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையை சக பயணியாக சொன்னது தெரிய வந்தது.

  

பெண்ணின் விவாதம் பேப்பர் வரை வந்து அவரை பிரபலம் ஆக்கினாலும் போலீஸ் அவருக்கு ஃபைன் போட தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஃபைனை எதிர்த்து கோர்ட்டில் வாதாட போவதாக அந்த பெண் சொல்லி இருக்கிறார்! அந்த வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.