(Reading time: 2 - 3 minutes)
A tourist fell into Italy's Mount Vesuvius in a selfie craze.
A tourist fell into Italy's Mount Vesuvius in a selfie craze.

வினோத செய்திகள் - செல்ஃபி மோகத்தில் இத்தாலியின் வெசுவியஸ் எரிமலையில் விழுந்த சுற்றுலா பயணி.

இத்தாலிக்கு சுற்றுலா சென்ற 23 வயது பயணி ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று வெசுவியஸ் எரிமலைக்குள் விழுந்தார். அந்த நபர் எரிமலையில் நுழைந்து செல்ஃபி எடுக்கும்போது தனது மொபைலை தவற விட்டு விட்டார். அதை மீட்டெடுக்க முயன்ற போது அவரும் உள்ளே தவறி விழுந்து விட்டார்.

   

அவரின் நல்ல வேளையாக அங்கே இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர் கீழே விழுந்ததை பார்த்ததும், உடனடியாக அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றினார்கள். பள்ளத்தில் விழுந்ததில் அவருக்கு முதுகு, கைகள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

  

விசாரித்ததில், இவர் அங்கீகரிக்கப்படாத திருட்டுப் பாதைப் பயன்படுத்தி,  வெசுவியஸ் எரிமலையின் உச்சி வரை 1,281 மீட்டர்கள் ஏறியது கண்டுப்பிடிக்கப் பட்டது.

 

வெசுவியஸ் மலைக்கு வருபவர்கள் நுழைவதற்கு டிக்கெட் வாங்க வேண்டும். தினம் 2,700 சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். சனிக்கிழமை அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன.

 

அதனால் இவர் இப்படி வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

  

மருத்துவ உதவி கொடுத்த கையோடு அத்துமீறியதற்காக அவரை போலீசார் கைதும் செய்திருக்கிறார்கள்.

 

செல்பி எடுக்க ஆசைப்பட்டு இப்போது ஜெயிலில் இருக்கிறார் அந்த இளைஞன்.

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.