Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பத்து நிமிட உருளைக்கிழங்கு பொரியல்
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
1⁄4 டீஸ்பூன் உப்பு
1⁄2 டீஸ்பூன் துருவிய பூண்டு
2 பெரிய உருளைக்கிழங்கு
செய்முறை
ஒரு பாத்திரத்தில், எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் உரித்து, நன்றாக கழுவி, துடைக்கவும்.
பின் உருளைக்கிழங்கை வேண்டிய அளவில் சின்ன க்யூப்களாக வெட்டுங்கள்.
உருளைக்கிழங்கை ஏற்கனவே செய்திருக்கும் எண்ணெய் கலவையில் சேர்த்து, மசாலை நன்றாக படுமாறு கலக்கவும்.
மசாலா தடவிய உருளைக்கிழங்கை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைக்கவும். மீதமிருக்கும் எண்ணெய் கலவையை உருளைக்கிழங்குகளின் மீது ஊற்றவும்.
உருளைக்கிழங்கை மைக்ரோவேவில் 8 முதல் 10 நிமிடங்கள் (அல்லது மிருதுவாகும் வரை) மைக்ரோவேவில் வைத்து வேக வைக்கவும்.
மைக்ரோவேவிலிருந்து அகற்றி சூடாக பரிமாறவும்.