(Reading time: 3 - 5 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - Healthy Recipes - பேக்ட் ஆப்பிள்

பேக்ட் ஆப்பிள் (Baked Apple) நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடக்கூடிய சிறந்த, எளிதான உணவுகளில் ஒன்றாகும். இது எந்த நாளுக்கும் ஏற்றது!

  

இது செய்வதற்கு மிகவும் ஈசியான ஒரு ரெசிபீ, ஆரோக்கியமான ரெசிபியும் கூட!

  

இந்த பேக்ட் ஆப்பிள் மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்!

  

தேவையான பொருட்கள்

1 ஆப்பிள்

  

ஸ்டஃப் செய்ய:

ஆப்பிளில் ஸ்டஃப் செய்ய உங்களுக்கு பிடித்தது போல பல வகையான காம்பினேஷன்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

2 டேபிள்ஸ்பூன் வால்நட் (முந்திரி, பாதாம் என எந்த வகையான nutsஐயும் பயன்படுத்தலாம்)

2 டேபிள்ஸ்பூன் உலர்ந்த திராட்சை

1 டேபிள்ஸ்பூன் உருகிய வெண்ணெய் (உப்பு சேர்க்காதது)

சிறிது தூளாக்கப்பட்ட இலவங்கப்பட்டை (விருப்பம் இருந்தால் வாசனைக்கு மேலே தூவலாம்)

சிறிது ஓட்ஸ் (விருப்பம் இருந்தால்)

சிறிது சர்க்கரை (இனிப்பு வேண்டுமென்றால்)

   

செய்முறை

ஒரு கத்தியை பயன்படுத்தி, ஆப்பிளை வெட்டாமல் நடுவே இருக்கும் கொட்டை மற்றும் கடினப் பகுதியை அகற்றுங்கள்.

  

ஒரு சிறிய கிண்ணத்தில், உலர் திராட்சை, வால்நட் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். ஓட்ஸ் மற்றும் சர்க்கரை சேர்ப்பதாக இருந்தால் அதையும் சேர்த்து கலக்கவும். கடைசியாக உருக்கிய வெண்ணெயையும் சேர்த்து கலக்கவும்.

  

மேலே செய்த பூரணத்தை (ஸ்டஃப்பிங்) எடுத்து, ஆப்பிளின் நடுவே கொட்டை அகற்றிய இடத்தில் வைக்கவும். பட்டைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால் இப்போது மேலே கொஞ்சமாக தூவுங்கள்.

  

ஏர் பிரையர் முறை:

ஏர் பிரையரில் 176 டிகிரி செல்சியஸ் (350 டிகிரி ஃபேரன்ஹீட்) செட் செய்து சூடாக்கவும்.

  

ஸ்டஃப் செய்த ஆப்பிள்களை ஏர் பிரையரில் வைக்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் வைத்து, ஏர் பிரையருள் வைக்கவும்.

  

20 நிமிடங்களில் சுவையான பேக்ட் ஆப்பிள் தயார்!

 

அவன் முறை:

அவனை 191 டிகிரி செல்சியஸ் (375 டிகிரி ஃபேரன்ஹீட்) செட் செய்து சூடாக்கவும்.

  

ஸ்டஃப் செய்த ஆப்பிள்களை அவனில் வைக்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அந்த பாத்திரத்தில் சிறிது வெதுவெதுப்பான வெந்நீர் (3/4 கப்) ஊற்றவும்.

 

ஆப்பிள் இருக்கும் பாத்திரத்தை அவனில் வைக்கவும்.

  

45 நிமிடங்களில் சுவையான பேக்ட் ஆப்பிள் தயார்!

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.