(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பிரியாணி - ரஞ்சி

biriyaani

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – ஒரு கிலோ

ஆட்டிறைச்சி – ஒரு கிலோ

பச்சை மிளகாய் – 25 (காரத்திற்கு ஏற்ப கூட்டி / குறைத்துக் கொள்ளவும்)

கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை – கைப்பிடி அளவு

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

வெங்காயம் – 2

பூண்டு – 10

இஞ்சி – ஒரு துண்டு

பெரிய தக்காளி – 1

கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

நெய் அல்லது டால்டா - 4 ஸ்பூன்

எண்ணெய் – 3 ஸ்பூன்

பட்டை – 2 துண்டுகள்

ஏலக்காய் – 3

கிராம்பு – 2

உப்பு – தேவைக்கு

முந்திரி பருப்பு – 20 (தேவை என்றால்)

செய்முறை

  1. ஒரு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
  2. தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  3. ஐந்து பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
  4. மட்டனை நன்கு சுத்தம் செய்து குக்கரில் உப்பு, கீறி வைத்த 5 பச்சை மிளகாய், சிறிது மஞ்சள் தூள், மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  5. பட்டை, கிராம்பு, ஏலக்காய் மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து தூள் செய்துக் கொள்ளவும்.
  6. ஒரு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
  7. அரிசியை நன்கு கழுவி பதினைந்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற விடவும்.
    1. பொதுவாக வதக்க தொடங்கும் முன் அரிசியை ஊற வைத்தால் சரியாக இருக்கும்.
  8. அடுப்பில் குக்கரை வைத்து, நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, சூடானதும், தூள் செய்து வைத்திருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காயை போடவும்.
    1. பொருட்களை வதக்கும் போது அடுப்பை மிதமான அளவில் வைக்கவும்
  9. பின் கறுவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  10. கொஞ்சம் ‘ரிச் டேஸ்ட்’ விரும்புபவர்கள், 20 முந்திரி பருப்பை சேர்த்து வதக்கவும்.
  11. இப்போது சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் இரண்டையும் சேர்த்து, நன்றாக வதக்கவும்.
  12. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  13. தக்காளி நன்கு வெந்து கலந்த உடன், கரம் மசாலா தூள், உப்பு, மஞ்சள் தூள், வேக வைத்த மட்டன் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
  14. கறி கலவையில் நன்கு சேர்ந்த பிறகு, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீரை சேர்க்கவும்.
  15. தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை சேர்க்கவும்.
  16. நன்றாக கிளறி, உப்பு அளவை சரி பார்த்து விட்டு குக்கரை மூடி விடவும்.
  17. இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  18. சுலபமாக செய்யக் கூடிய ஆனால் சுவையான கம கம பிரியாணி தயார்! முட்டை மாற்றி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.