(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - செட்டிநாடு ஸ்பெஷல் - பால் பணியாரம் - ராஜி

Pal paniyaram

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 200 கிராம்

உளுந்தம்பருப்பு - 200 கிராம்

பால் - அரைலிட்டர்

ஏலக்கா - 4

சக்கரை - 100 கிராம்

உப்பு - 1 சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் பச்சரிசி உளுந்தம்பருப்பு இரண்டையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அலசி 2 - 21/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  2. பிறகு அதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு கலந்த்து வைக்கவும்.
  3. அடுப்பில் பணியாரக்கல் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
  4. சூடானதும் மாவை கரண்டியில் எடுத்து பணியாரக்கல்லில் ஊற்றவும்.
  5. ஒருபக்கம் சிவக்க வெந்தவுடன் மறுபுறம் திருப்பி சிவக்க வெகவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். ஏலத்தை பொடி செய்து சேர்துக்கொள்ளவும்.
  7. இறுதியாக சக்கரையையும் சேர்த்து நன்றாக காய்ச்சி இறக்கி வைத்துக்கொள்ளவும்.
  8. பால் கொஞ்சம் ஆறியவுடன் சுட்டெடுத்த பணியாரங்களை அதனுடன் சேர்த்து ஊற விட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறவும்

 

து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை & மை ஃபேவரைட் ரேசிப்பி டூ ஹி........ஹி.........       

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.