(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - மணத்தக்காளி வத்தல் குழம்பு - நந்தினி

மணத்தக்காளி வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 10

மணத்தக்காளி வத்தல் – 3 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 10 பல்

புளி – சின்ன எலுமிச்சை அளவு

உப்பு ,கருவேப்பிலை-தேவையான அளவு

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மல்லி தூள் - 3 ஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்

தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

மிளகு - 10

சீரகம் - அரை ஸ்பூன்

தக்காளி - 1

நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்

கடுகு - சிறிதளவு

வெந்தயம் - சிறிதளவு

செய்முறை

  1. தேங்காய் துருவல், மிளகு , சீரகம் மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  2. கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், கடுகு ,வெந்தயம் ,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  3. பின் மணத்தக்காளி வத்தலை போட்டு நன்கு வறுக்கவும்.
  4. பின் சின்னவெங்காயம், நசுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.
  5. அதன் பின் அனைத்து தூள்களையும் சேர்த்து வதக்கவும்.
  6. பச்சை வாசனை போய் தூள் நன்கு கலந்த பிறகு, தக்காளியை சேர்த்து வதக்கவும்
  7. தக்காளி நன்கு வெந்து கலந்த உடன், புளியை கரைத்து ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் கலவையையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்
  8. சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.