(Reading time: 1 - 2 minutes)

Chillzee சம்மர் ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - ரவை வடாம் - நந்தினி

ravai vadaam

தேவையான பொருட்கள்

ரவை - 1 கிலோ

பச்சை மிளகாய் - 200 கிராம்

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - 2 டீஸ்பூன் (தூள்)

தண்ணீர் - 8 லிட்டர்

 

செய்முறை

  1. பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு மைய்ய அரைக்கவும்.
  2. ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அரைத்த பச்சை மிளகாய் விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  3. தண்ணீர் கொதிக்கும் போது சிறிது சிறிதாக ரவையை தூவவும்.
  4. ரவை கட்டி ஆகி விடாமல் கிளறி விடவும்.
  5. இந்த கலவை நன்றாக வெந்ததும் ஸ்டவ்வில் இருந்து இறக்கவும்.
  6. சூடாக இருக்கும் போதே கரண்டியில் எடுத்து ஒரு சுத்தமான ஈரத் துணியில் விருப்பமான அளவில் வட்ட வட்டமாக ஊற்றி வெயிலில் நன்றாக காய விடவும்.
  7. வற்றல் நன்கு காய்ந்த உடன் ஒரு air tight containerல் போட்டு வைத்து, தேவைக்கு ஏற்ப பயன் படுத்தவும்.

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.