(Reading time: 3 - 6 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - முளைக்கட்டிய வெந்தயம் சாலட்

kolaUrundaiKuzhambu

தேவையான பொருட்கள்

கோலா உருண்டைக்கு:

துவரம் பருப்பு - 1 கப்

பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 3 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி தழை (சிறிதாக நறுக்கப் பட்டது) - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல்

 

அரைக்க:

சிவப்பு மிளகாய் வத்தல் - 8

சோம்பு - 1/4 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

குழம்பிற்கு:

சின்ன வெங்காயம் - 1/4 கப்

பூண்டு - 6 பல்

தக்காளி (மீடியம் அளவு) - 4

கெட்டியாக கரைத்த புளி கரைசல் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

இட்லி அரிசி - 2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 1/4 கப்

 

அரைக்க

தனியா - 2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 10

சீரகம் - 3/4 டீஸ்பூன்சோம்பு - 1/4 டீஸ்பூன்

கசகசா - 1 1/2 டீஸ்பூன்

 

தாளிக்க 

கடுகு - 1/4 டீஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

 

செய்முறை

கோலா உருண்டை

தண்ணீரில் துவரம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். கடைசியில் ஊற வைத்த பருப்பில் இருந்து தண்ணீரை வடித்து எடுத்து விட்டு அதையும் சேர்த்து கெட்டியாக வடை மாவு போல அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம், துருவிய தேங்காய், கொத்தமல்லி தழை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

சிறிய எலுமிச்சை பழ அளவு உருண்டைகளாக தயாரித்துக் கொண்டு எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து 7 - 8 நிமிடம் குக்கரில் ஆவியில் வேக விடவும்.

 உருண்டைகளை தனியாக எடுத்து வைத்து ஆற விடவும்.

 

குழம்பு:

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்துக் கொள்ளவும்.

சூடான வாணலியில் இட்லி அரிசி பொறியும் வரை வருத்துக் கொள்ளவும்.

துருவிய தேங்காயுடன் அனைத்தும் சேர்த்து திட்டமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தையும் பூண்டையும் உரித்து, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

பின் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.

பொன்னிறமாக வதக்கிக் கொண்டு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வெந்து கூழ் போல் ஆன உடன் புளிக் கரைசலை சேர்த்து பின் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

தேவை என்றால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆற வைத்துள்ள கோலா உருண்டைகளை கொதிக்கின்ற குழம்பில் ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

இரண்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். 

சாதத்துடன் சூடாக பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்!

குழம்பு கெட்டியாக வேண்டுமென்றால், 1 அல்லது 2 கோலா உருண்டைகளை உதிர்த்து குழம்பு கொதிக்கும் போது சேர்த்துக் கொள்ளவும். 

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.