(Reading time: 2 - 3 minutes)

Cooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்

Cooking Tips

ல்வா வாங்கினால் அதை ஃப்ரிட்ஜ்க்கு மேல் இருக்கும் ஸ்டெப்ளைசரில் மேல் வைத்தால் எப்போதும் அல்வா கெட்டியாகாமல் தளற தளற இருக்கும். ஃப்ரிட்ஜினுள் அல்வா வைத்தால் கெட்டியாகிவிடும்

 

பாலை லேசாக சூடுபடுத்தி அதில் அரை ஸ்பூன் சக்கரையை போட்டு அதில் தயிருக்காக உறை ஊற்றவும் 8 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் கெட்டித்தயிராக இருக்கும்

 

குளிர்காலங்களில் அடுப்பை அணைத்ததும் பர்னர் சிறிது நேரம் சூடாக இருக்கும் அதன் மேல் உறை ஊற்றிய பால் பாத்திரத்தை வைத்தால் சீக்கிரமாக தயிராகும்.

 

கொத்துமல்லி கீரையை வாழையிலையில் சுற்றி ப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை பசுமை மாறாமல் இருக்கும். கொத்துமல்லியை வெளியில் வைக்கவேண்டுமெனில் நனைத்த காகிதங்களில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்

 

தோசை மாவு அதிகம் புளித்துவிட்டால் அதில் ஒரு கப் பால் சேர்த்து தோசை சுட்டால் புளிப்புத்தன்மை குறைந்துவிடும்

  

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.