Cooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்
காலிஃப்ளவர் வேக வைக்கும் போது நிறம் மாறாமல் இருக்க அரிசிமாவு அல்லது ரவை கூட சிறிது மிளகுப்பொடி கலந்து வேகவைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்
முட்டைகோஸ் சமைக்கும் போது அதில் ஒரு துண்டு இஞ்சியை நசுக்கி போட்டால் அந்த முட்டைக்கோஸின் பச்சை வாசனை போய்விடும்
சமையல் செய்யும் போது கையில் சூடுபட்டால் உடனே உருளைக்கிழங்கை நசுக்கி அதில் வரும் சாற்றை சூடுபட்ட இடத்தில் தேய்த்தால் கொப்புளம் வராது புண்ணாகாது.
வடாம் வெயிலில் காயும் போது காய்ந்த மிளகாய்களை (சிவப்பு வத்தல் மிளகாய்களை) இடையிடையே வைக்க காகம் எட்டிப்பார்க்காது.
தேனை ஸ்பூனால் எடுக்கும் போது பாதி தேன் ஸ்பூனில் ஒட்டிக்கொள்ளும் இதை தவிர்க்க ஸ்பூனின் இருபுறமும் முதலில் சிறிது நெய்யை தடவி பிறகு தேனை எடுக்கவும் ஒட்டாமல் வரும்
{kunena_discuss:794}