Cooking Tips # 19 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்
பன்னீரை, உப்பு நீரில் லேசாக நனைத்து பின் சமையலில் சேர்த்தால் ஈசியாக குழம்பில் சேரும். சுவை அதிகமாகும்.
இந்திய உணவுகள் தயாரிக்கும் போது, வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, மசாலா பொருட்கள் என்ற வரிசையில் சேர்த்தால் சுவை அதிகமாகும்.
வேக வைத்த பச்சை பட்டாணியில் பச்சை கலர் இருக்க வேண்டும் என்றால், பட்டாணியை கொதிக்க வைக்கும் தண்ணீரில் சிறிது சர்க்கரை சேருங்கள்.
பருப்பு சமைக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்தால் பொங்கி வழிந்து வீணாகாது
மொருமொரு பூரி தயார் செய்ய, கோதுமை மாவுடன் சிறிது ரவை சேர்த்து பூரிக்கு மாவை பிசையுங்கள்.
சாக்லேட்டை உருக்க வேண்டி இருந்தால், ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உருக்கிய சாக்லேட்டை பயன்படுத்துவது சுலபமாக இருக்கும்.