வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா
சுவிட்சில் அடிக்கடி கைபட்டு அழுக்காகி விட்டால் பெரிய ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் அழுக்கு ஆகாது அழுக்கானால் வேறு பொட்டை ஒட்டுங்கள்
தினம் அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறையேனும் டீப்ராஸ்ட் செய்தால்தான் ஃப்ரிட்ஜின் ப்ரீசரில் மேல்புறத்தில் படிந்துள்ள பனிபோர்வை அகலும் கம்ப்ரஸருக்கும் நல்லது.
வெள்ளைத் துணிகளை நீலத்தில் நனைக்கும் போது சிறிதளவு வாஷிங் சோடா நீரில் சேர்க்க வேண்டும் இப்படி செய்தால் திட்டுத்திட்டாக நீலம் படியாது சீராக இருக்கும்
ஒரு சிம்னி விளக்கில் வேப்பெண்ணெய் விட்டு இரவில் விளக்கேற்றி் வையுங்கள் வேப்பெண்ணெய் வாசனைக்கு கொசுவே வராது. அலர்ஜியும் வராது
கறுத்து போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்து பாருங்கள் பாலீஷ் போட்டது போல இருக்கும்
{kunena_discuss:747}