(Reading time: 1 - 2 minutes)

வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 13 - சசிரேகா

Home care tips

கிரைண்டர் பாத்திரத்தில் குதிரையின் ஸ்டிக்கரை ஒட்டிவைத்தால் கிரைண்டர் வேலை செய்யும் போது குதிரை வேகமாக ஓடுவது போல இருக்கும் குழந்தைகள் பார்த்தால் மிகவும் ரசிப்பார்கள்.

 

வீணாகும் புளித்த மோரில் வெண்கலம் மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட சாமி விக்கிரகங்களை ஊறவிடுங்கள் சிறிது நேரம் கழித்து தேய்த்து கழுவினால் பளிச்சென இருக்கும்

 

ஹேர்டை பட்ட கறையை ஆப்டர் ஷேவ் லோஷன் கொண்டு தேய்த்தால் கறை போய்விடும்

 

வீட்டு சுவரில் ஆணி அடித்த துளிகளை மறைக்க வெந்நிற சாக்பீஸ் துண்டுகளை துளையின் அளவுக்கு சீவி துளையில் செருகி விடுங்கள். அதன் மேல்பரப்பை பிரஷ்ஷினால் லேசாக தேய்த்துவிட சுவர் பளிச்சென்றாகும்.

 

லெதர் பையை சுத்தம் செய்ய ஆலிவ் எண்ணெய்யை சிறிது தடவி அரை மணி நேரம் கழித்து மெல்லிய துணியால் துடைத்தால் பளிச்சென மின்னும்

 

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.