வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 16 - சசிரேகா
பிள்ளையார் எறும்புகள் நிறைய ஓடும் இடத்தில் ஒரு இரும்பு சாமானை (இரும்புக் கரண்டி போன்றவை) வைத்துப்பாருங்கள் அடுத்த நிமிடம் எறும்புகள் மாயமாகிவிடும்
டிவி ரேடியோ இவைகளை ஒரு போதும் நைலான், சில்க் துணியால் மூடக்கூடாது. எலக்ட்ரானிக் பாகம் பழுதடையும் பருத்தி துணியால் மூடவேண்டும்
புதிதாக வாங்கிய ப்ளாஸ்டிக் சாமான்களில் வரும் வாடையை நீக்க அதில் சுடுதண்ணீர் ஊற்றி கொஞ்சம் கல் உப்பையும் போட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள் பின் கழுவினால் வாடை போய்விடும்.
பால்பாயின்ட் பேனா எழுதும் போது எழுதாமல் நின்றுவிட்டால் கண்ணாடி தகட்டில் எழுதிப்பாருங்கள் மீண்டும் தொடர்ந்து எழுத வரும்
காந்தத்தையோ காந்தம் உள்ள பொருட்களையோ டிவிக்கு அருகில் வைக்காதீர்கள் இதனால் டிவி பழுதடையும்
{kunena_discuss:747}