(Reading time: 2 - 3 minutes)

வீட்டுக் குறிப்புகள் - 23 - சசிரேகா

Home care tips

 

மெழுகுவர்த்தியை தரையிலோ அல்லது கப்பிலோ வைக்காமல் அகல்விளக்கில் வைத்து பற்ற வைத்தால் எரிந்து உருகிய மெழுகு அந்த அகல்விளக்கில் நிரம்பிவிடும் அதில் ஒரு திரியை வைத்து பற்ற வைத்தால் அது ஒரு விளக்கு போல இருக்கும். மெழுகும் வீணாகாது.

 

முடியில் அடிக்கும் கறுப்பு டை சருமத்தில் விழுந்து விட்டால் அந்த இடத்தில் டெட்டால் வைத்து உடனே துடைத்துவிடுங்கள் இல்லாவிட்டால் அந்த தோல் பகுதியில் ரசாயண எதிர்விளைவுகள் தோன்றிவிடும்

 

-ப்ரோ பென்சிலை பிரிட்ஜில் ஒரு நாள் வைத்து வெளியே எடுத்து சீவினால் கூர்மையாக வரும் சீவுவதற்கும் கடினமாக இருக்காது.

 

வெளியே வெயிலில் போய்விட்டு வீட்டுக்கு வந்த உடன் ஃபேன் கீழே உட்காரக்கூடாது. நன்றாக வேர்வையை துடைத்துவிட்டு உட்கார வேண்டும் இல்லையென்றால் வறட்டு சளி பிடித்து உடம்பு சரியாக வாரக்கணக்காகும்.

 

ழுத்து கறுப்பாக இருந்தால் ஒரு சின்ன உருளைக்கிழங்கை மிக்சியில் நைஸாக அரைத்து அதில் சிறிது கடலை மாவை சேர்த்து கலந்து கழுத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து நீரில் அலம்பிவிடவும் 2 நாட்களுக்கு ஒரு முறை இப்படி செய்தால் 2 வாரங்களில் அந்த கறுமை மறைந்துவிடும்

 

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.