வீட்டுக் குறிப்புகள் - 24 - சசிரேகா
கண்ணில் தூசி விழுந்துவிட்டால் சிறிது வெண்ணெயை மைஇடுவது போல் இட்டால் கண் சூட்டில் வெண்ணெய் உருகி தூசியுடன் வெளிவந்துவிடும்.
கான்டாக்ட் லென்ஸ் கீழே தரையில் விழுந்துவிட்டதா முதலில் ரூமை இருட்டாக்குங்கள் பிறகு டார்ச் வெளிச்சம் அடித்தால் லென்ஸ் மினுமினுக்கும் அதை வைத்து கண்டுபிடிக்கலாம்
கையை துடைப்பதற்காக உபயோகிக்கும் நாப்கின் டிஷ்யு பேப்பரால் மூக்கு கண்ணாடியை துடைத்தால் பளபளப்பாக இருக்கும்
சிறிதளவு வசம்பை அரைத்து தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்தால் ஈக்கள் போய்விடும்
ஆரஞ்சு பழத்தோல்களை வெயிலில் நன்றாக காயவைத்து துணிவைக்கும் பீரோவில் வைத்தால் பூச்சி வராது
{kunena_discuss:747}