(Reading time: 3 - 6 minutes)

தோட்டம் ஆரம்பிக்கலாம் வாங்க!

தோட்டம் என்றாலே நிறைய இடம் தேவை என்று நிறைய பேர் நினைத்துக் கொள்கிறார்கள்! அது உண்மை இல்லை. உங்கள் சமையலறையில் கூட நீங்கள் செடிகளை வளர்க்கலாம்! என்ன உங்களுக்கு பொறுமையும் விடாமுயற்சி அவசியம்!!!

 

பூச்சிக்கொல்லி இல்லாத காய்கறிகளை வளர்ப்பது என்றாலும் புது பொழுதுபோக்கிற்காக என்றாலும், கிடைக்கும் இடத்தில் தோட்டம் வைத்திருப்பது நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது.

  

முதல் முறையாக தோட்டம் வளர்ப்பதை பற்றி யோசிக்கிறீர்கள் என்றால் சிறிய தொட்டியில், ஒரு செடியுடன் தொடங்குங்கள்!

தக்காளி, துளசி, மிளகாய் போன்ற செடிகளை வளர்ப்பது எளிதானது. அவற்றை ஜன்னலுக்கு அருகில் அல்லது லிவிங் ரூமில் வைக்கலாம்.

  

இடம்

உங்கள் சொந்த காய்கறிகளை வீட்டிலேயே வளர்ப்பதற்கு பொருத்தமான இடத்தை தீர்மானிக்கும் போது திறந்த மொட்டை மாடி ஒரு நல்ல வழி என்றாலும், ஜன்னல் போன்ற ஏராளமான சூரிய ஒளியைக் கொண்ட எந்த இடமும் பொருத்தமானது.

ஒரு நாளில் நான்கு முதல் ஐந்து மணி நேரம் சூரிய ஒளிப் பெறும் இடமாக தேர்வு செய்யுங்கள்.

ஒரு வேலை அதிக வெயில் இருந்தால் அதில், இருந்து உங்கள் செடிகளை காப்பாற்ற மூடி வைக்க முடியுமா என்றும் யோசியுங்கள்..

 

தொட்டி

உங்கள் காய்கறிகளை வளர்க்க மண் பானைகள் கட்டாயம் என்றில்லை. பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள், வாளிகள் மற்றும் தொட்டிகளையும் செடி தொட்டியாக தேர்வு செய்யலாம்.

இப்படி செய்வது செலவை குறைக்கும் மட்டுமல்ல, மறுசுழற்சியையும் (recycling) ஊக்குவிக்கும்.

 

மண்

செடிகள் சீராக வளர சரியான மண்ணின் தேர்வு செய்வது முக்கியமானது, ஏனெனில் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகள் எவ்வளவு ஆரோக்கியமாக வளரும் என்பதை தீர்மானிக்கிறது.

ஒரு நர்சரியில் இருந்து செடி வளர்க்கும் வழக்கமான மண்ணைப் பெறுங்கள். அதில் இயற்கை உரம் சேருங்கள். ஆர்கானிக் செடிகளை பெற மாட்டு சாணம் அல்லது ஆடு சாணத்தையும் சேர்க்கலாம்.

அல்லது, உங்கள் வீட்டில் இருந்து கிடைக்கும் காய்கறி தோல்கள், பழங்கள் போன்றவற்றையும் மண்ணில் சேர்க்கலாம்.

 

விதை

நர்சரியில் இருந்து விதைகளை எளிதாக வாங்கலாம். ஆனால் கலப்பின விதைகளை (hybrid seeds) விட இயற்கையான மகரந்த சேர்க்கை விதைகளை வாங்குங்கள்.

விதைகளை விதைத்தவுடன், உங்கள் திட்டிகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

 

தண்ணீர்

செடிகள் செழிப்பாக வளர் நீர் அவசியம் ஆனால் அதிகப்படியான நீர் சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் மண்ணிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் சென்று விடும். எனவே தேவைக்கு தண்ணீர் ஊற்றுங்கள். கோடைகாலத்தில் இரண்டு முறையும் குளிர் / மழைக் காலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்றும் தேவைக்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.

தண்ணீர் ஊற்றும் முன் உங்கள் கை விரல்களால் மண்ணை அழுத்தி, மண்ணின் ஈரப்பதத்தை தெரிந்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றுங்கள்..

 

பராமரிப்பு

உங்கள் செடிகளின் வளர்ச்சியை கவனித்துக் கொண்டே இருங்கள். பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பூச்சிகள் இருந்தால் இருந்தால், வேப்ப இலை நீரை தெளிப்பது பூச்சிகளைத் போக்க உதவும்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.