(Reading time: 2 - 3 minutes)

தோட்டக்  குறிப்புகள் - நீங்களே களைகளை அகற்ற சில ஈஸி வழிகள்

தீங்கு விளைவிக்கும் களைக் களையும் கெமிக்கல் மருந்துகள் சுற்றுச்சூழல் அமைப்புக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானவை.

களைகளை அகற்ற, நீங்களே தயாரித்து பயன்படுத்தக் கூடிய சில கரிம முறைகள் (organic weed killers) இதோ உங்களுக்காக.

 

வினிகர்:

120 மில்லி எலுமிச்சை சாறு, ஒரு லிட்டர் வெள்ளை அல்லது சைடர் வினிகரை ஒன்றாக கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, நேரடியாக களைகளில் தெளிக்கவும்.

இதை வெயில் அடிக்கும் நேரத்தில் செய்வது சிறந்தது.

 

முட்டை:

முட்டைகளை வேகவைக்கப் பயன்படும் தண்ணீரை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் ஊற்றவும்.

 

வினிகர் மற்றும் சோப்பு கலவை:

ஒரு லிட்டர் வெள்ளை வினிகரை, 60 மில்லி (கால் கப்) உப்புடன் கலந்து, உப்பு கரையும் வரை நன்றாக கிளறவும். பின்னர் மெதுவாக இரண்டு டீஸ்பூன் (காய்கறி சார்ந்த) லிக்விட் சோப்பை சேர்க்கவும். நன்றாக கலக்கி விட்டு, களைகளில் நேரடியாக தெளிக்கவும்.

வறண்ட வானிலை இருக்கும் நாட்களில் இதை பயன்படுத்தவும்.

  

உப்பு:

களைகள் மேலே சிறிது தண்ணீரை தெளிக்கவும். பின்னர் அதன் மேலே உப்பு தெளிக்கவும். இப்போது மீண்டும் களைகளை லேசாக தண்ணீரால் ஈரப்படுத்தவும்.

இந்த முறை நடைபாதைகளின் விரிசல்களில் வளரும் களைகளை அகற்ற மட்டுமே சிறப்பாக பயன்படுகிறது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.