(Reading time: 2 - 3 minutes)

வீட்டுக் குறிப்புகள் - 49 - உங்கள் கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்வது எப்படி?

ங்கள் கேஸ் ஸ்டவ்வின் பர்னர்களை அகற்றி அவற்றை ஒதுக்கி வைக்கவும்.

 

ஸ்டவ்வில் ஒட்டாமல் இருக்கும் உணவு துணுக்குகளை மெல்ல அகற்றுங்கள்.

 

கண்ணாடிகளை சுத்தம் செய்யும் கிளீனர் இருந்தால் அதை ஸ்டவ்வின் மேலே சிறிது தெளியுங்கள்.

க்ளாஸ் கிளீனர் இல்லையென்றால் சிறிது டிடர்ஜன்ட் சோப்பை சூடான நீரில் கலந்து அதை தெளிக்கவும்.

சோப், கிளீனர் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்த விரும்பினால் அரை கப் தண்ணீருடன் அரை கப் பேக்கிங் சோடா கலந்து அதை ஸ்டவ்வின் மேலே எல்லா இடத்திலும் படுமாறு தெளிக்கவும்.

 

சிறிது நேரம் விட்டு விட்டு, ஒரு ஸ்பான்ஜ் பயன்படுத்தி மெல்ல ஸ்டவ்வை துடையுங்கள். காய்ந்து போன உணவுகள் இருந்தால் அந்த இடத்தில் தண்ணீர் இருக்கும் போதே அழுத்தமாக துடையுங்கள்.

 

எல்லா அழுக்கும் போன பிறகு வேறு ஒரு சுத்தமான ஸ்பான்ஜ் அல்லது துணி பயன்படுத்தி நாம் பயன்படுத்திய கிளீனரை நன்றாக துடைத்து எடுங்கள்.

பேக்கிங் சோடா பயன்படுத்துவதாக இருந்தால், ஸ்டவ்வை சுத்தம் செய்தபின் சிறிது வெள்ளை வினிகரை (WHITE VINEGAR) ஸ்டவ்வின்  மேலே தெளிக்கவும். இதை செய்வதன் மூலம் மீதமுள்ள பாக்டீரியாக்களை அகற்றுவதனுடன், திட்டு திட்டாக இருக்கும் பேக்கிங் சோடாவை அகற்றுவதும் எளிதாக இருக்கும்.

 

பர்னர்களை திரும்ப ஸ்டவ்வின் மேலே வையுங்கள்!

 

மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது இதை செய்யுங்கள். உங்கள் ஸ்டவ் பளிச்சென்று இருக்கும். 

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.