(Reading time: 3 - 6 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - தனிமையில் பாடும் திமிங்கிலம்

52 என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு திமிங்கலம் உலகின் தனிமையான திமிங்கிலம் என்று சொல்லப்ப்படுகிறது.

இந்த திமிங்கலம் எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியும். ஆனால் இப்படி ஒரு திமிங்கலம் இருக்கிறது என்பதை மட்டும் விஞ்ஞானிகள் அறிவார்கள். இந்த திமிங்கலத்தின் பாடல்கள் (ஒலிகள்) சோனார் டிடெக்டர்கள் மூலம் எடுக்கப்பட்டுள்ளன. அந்த பாடல்கள் எப்போதும் 52 ஹெர்ட்ஸ் அலைவரிசையில் இருப்பதால் அதற்கு 52 என்று பெயரிட்டு உள்ளார்கள்.

இந்த திமிங்கலத்தின் குறிப்பிட்ட இனம் எது என்று இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை. இதன் ஒலி வரும் அலைவரிசை மற்ற தெரிந்த திமிங்கல இனங்களுடன் ஒப்பிடும் போது மிக உயர்ந்த ஒன்றாகும்.

மற்ற திமிங்கலங்கள் 52ன் அழைப்பை புரிந்துக் கொள்ளாததால், அதற்கு ஒருபோதும் பதிலளிக்கவில்லை. இதனால் 52 எப்போதும் தனிமையில் இருக்கிறது.

இந்த திமிங்கலம் பொதுவாக கலிபோர்னியா பகுதியில் இருந்து வடக்கு பசிபிக் வரை தனியாக பயணம் செய்கிறது. 52 எப்போதும் தானாக இந்த பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.

விஞ்ஞானிகள் இந்த 52 ஒரு நீல திமிங்கலத்திற்கும், வேறு இன திமிங்கலதிற்கும் இடையே பிறந்த திமிங்கலமாக இருக்கலாம் என்று யூகிக்கிறார்கள், ஆனால், அதை நேரில் பார்க்காமல் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்றும் சொல்கிறார்கள்.

மேரி ஆன் டஹெர் பல ஆண்டுகளை 52 பற்றி ஆராய்ச்சி செய்ய செலவிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் பற்றிய ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.

அந்த திமிங்கலத்தின் தனிமையை புரிந்துக் கொள்ள முடிகிறது என்பது போன்ற செய்திகள் உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு வந்துள்ளது.

52 பற்றி எழுதப்பட்ட பாடல்களும், கதைகளும் கூட இருக்கின்றன.

ஒரு பிரிட்டிஷ் ராக் இசைக்குழு “உலகின் தனிமையான திமிங்கிலம்” என்ற பாடலை வெளியிட்டுள்ளது. 52 ஹெர்ட்ஸ் வால் என்ற தலைப்பில் ஒரு ஜெர்மன் எழுத்தாளர் குழந்தைகள் புத்தகமும் எழுதி இருக்கிறார்.

இன்று வரை விஞ்ஞானிகளும், கடல் ஆர்வலர்களும் 52 ஐத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். 52ஐ புரிந்துக் கொண்டு, அதற்கு ஏற்ற ஒரு துணையையும் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

அதுவரை அது தொடர்ந்து தனிமையில் பாடிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!

  

😊


The Loneliest Whale

 

A whale that goes by the name of 52 has become known as the loneliest whale in the world.

Though it has never been spotted, scientists only know of its existence because its sounds have been picked up through sonar detectors, and 52 got its name because of the frequency of its songs—52 hertz.

Its species is unknown, but the hertz level is one of the highest amongst whales and is not recognized by other whales.

Because other whales do not recognize its call, it is never answered, and 52 is left all alone.

The whale generally travels alone from the California area to the North Pacific, and it is believed that he has always traveled on his own. Scientists guess that the whale could be a mix between a blue whale and another species, but, without a sighting, they cannot be certain.

Mary Ann Daher has spent a number of years researching 52 and has published papers on the whale and her discoveries.

She has received mail from all over the world from people with heartbreaking messages, saying that they can relate to the whale and its loneliness.

There have even been songs and stories written about 52.

A British rock band released a song called “The

Loneliest Whale in the World”, while there is a children’s book by a German author entitled 52 Hertz Wal. Scientists and marine enthusiasts alike continue to search for 52, with hopes to better understand the creature and find it a mate.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.