(Reading time: 3 - 5 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - குழந்தைக்கு என்ன பெயர் என்பதை தீர்மானம் செய்யும் அரசு

குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம், வைக்க கூடாது என்று நம் நாட்டில் எந்தவிதமான சட்டமோ, வழிகாட்டுதல்களோ இல்லை. ஆனால் சில நாடுகளில் மிகவும் கடுமையான நிபந்தனைகள் உள்ளன.

 

ஸ்வீடனில் 1982 ஆம் ஆண்டு ‘பெயரிடும் சட்டம்’ என்று ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு என்ன பெயரிடலாம் என்பதைக் கட்டுப்படுத்துகிறது.

 

அரசக் குடும்பம் அல்லாதவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரச பரம்பரை பெயர்களை வைப்பதை தடுக்க தான் முதலில் இந்த் சட்டம் வந்தது. ஆனால் இப்போது தவறான பெயர்களை தேர்ந்தெடுப்பதையும் தடுக்கிறது.

ஐக்கியா, எல்விஸ் போன்ற பெயர்கள் நிராகரிக்கப் பட்டிருக்கின்றது.

 

பெயர் வைப்பதில் கடுமையான வழிகாட்டுதல்களைக் கொண்ட நாடுகளில் டென்மார்க் இன்னொன்று.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்களைக் கொடுப்பதைத் தடுக்க முன்பே அங்கீகரிக்கப்பட்ட 7,000 பெயர்களின் பட்டியல் அந்த நாட்டில் உள்ளது.

 

அந்த பட்டியலில் இல்லாத பெயரை குழந்தைக்கு சூட்ட விரும்பினால், அரசாங்கத்திடமிருந்தும், உள்ளூர் தேவாலயத்திலிருந்தும் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

 

அதற்கும் மேலாக, பொதுவான பெயர்களை வித்தியாசமாக எழுதுவது, எழுத்துப்பிழைகள் நிறைந்த பெயர்கள் என்பன போன்றவையும் பொதுவாக நிராகரிக்கப்படுகின்றன. தந்தை பெயர் அல்லது குடும்பப் பெயரையும் குழந்தைக்கு வைக்க முடியாது.

 

ஜெர்மனியின் விதிகள் சற்று வித்தியாசமானது. அங்கே குழந்தையின் பாலினத்தில் அதிக கவனம் செலுத்தும் சட்டங்கள் உள்ளன.

 

பெயரை வைத்தே குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துக் கொள்வதுப் போல பெயர் தேர்வு செய்ய வேண்டும். மேலும் குழந்தைகளின் நல்வாழ்விற்கு எதிர்மறையாக இருக்கக் கூடிய பெயர்களும் நிராகரிக்கப்படுகின்றன.

 

பெற்றோர்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும் அரசாங்க அலுவலகமே பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை தீர்மானிக்கும்.

  

😊


Government decides the baby’s name

 

While our country doesn’t have any set guidelines as to what you can and cannot name your child, other countries have much stricter stipulations.

 

Sweden has an official law called the Naming Law, put into effect in 1982, that limits what parents can name their child.

 

It originally served the purpose of preventing non-royals from giving their children noble names, but it now keeps families from choosing first names that are offensive.

 

Names that have been rejected include Ikea and Elvis.

 

Amongst the countries with the harshest guidelines is Denmark.

The country has a list of 7,000 pre-approved names to prevent parents from giving their children weird names.

 

If you want to name your baby a name that is not on the list, you must get special permission, both from the government and your local church.

 

More than that, unique spellings of common names are usually rejected, and last names cannot be used as a first name.

 

Germany’s rules are a bit different, focusing more on gender.

 

You must be able to discern a child’s gender based on their name, and they can’t have a name that negatively impacts their well-being.

 

The local area in which the parents live has an office that decides if names are approved or rejected.

  

😊

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.