(Reading time: 2 - 3 minutes)

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Movie - Tamil Selvanum thaniyaar anjalum

Music - Karthik

Lyrics - Madhan Karky

Singers -Karthik & Sricharan

Actors - Jai, Yami Gautam

Released in 2016

Tamilselvanum_Thaniyaar_Anjalum
 

Watch it in You Tube:

 

Lyrics:

ஓஹோ வெண் மேகங்கள்
ஆஹா என் வானெங்கும்
ஓஹோ உன் பேர் சொல்லி
தூறல் தெளிக்குது தெளிக்குது 

வானில் நீலம் இல்லை
புல்லில் பச்சை இல்லை
பெண்ணே உன்னைப் போலே
யாவும் வெள்ளையில் சிரிக்குது!

என் தேசிய வண்ணம்.... வெள்ளை
என் பூமியின் பூக்கள்... வெள்ளை
என் வானவில் வண்ணம் ஏழும் வெள்ளையே! ஹே
என் ஆடையின் வண்ணம்... வெள்ளை
உள் பாய்ந்திடும் ரத்தம்... வெள்ளை
என் உள்ளமும் உன்னால் இன்று வெள்ளையே! ஹே

சாலைத் தாரும் வெள்ளை
வாழைத் தாரும் வெள்ளை
பாலைச் சேர்க்கவில்லை கா...ஃபி வெள்ளை

எந்தன் தாளும் வெள்ளை
பேனா மையும் வெள்ளை
என் காதல் சொற்கள் வெள்ளையே

எந்தன் பியானோ எங்கும்
வெள்ளைக் கட்டை மட்டும் தான்
வெண்ணிசை நான் செய்தேன் கேளு!

ஹே புள்ள புள்ள புள்ள - நீ
மெள்ள மெள்ள மெள்ள 
பூண்டு பல்லப் போல சிரிக்குறியே....

ஹே புள்ள புள்ள புள்ள - என்
உள்ள உள்ள உள்ள நீ
வந்து வெள்ளையடிக்குறியே... 

zebra கோடும் வெள்ளை
cobra கண்ணும் வெள்ளை
எந்தன் கூரை மேலே காக்...கை வெள்ளை!

பஞ்சவர்ணக்கிளி 
வர்ணப்பஞ்சத்திலே
வெண்பெண்ணே எல்லாம் உன்னாலே!

என் மீசை தாடி
மட்டும் விட்டு வைப்பாயா?
மையலே நீங்காதே என்னை!

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.