(Reading time: 3 - 5 minutes)

குடும்பம் - திருமணத்திற்கு பின் ஆணின் 🤵🤵 வாழ்வில் ஏற்படும் தலைகீழ் மாற்றங்கள் 🙃

 

ந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆண்கள் வாழ்வில் திருமணம் கொண்டு வரும் மாற்றங்களை ஜாலியாக பார்ப்போம் வாங்க 😃😃!

தொ(ல்)லைக்காட்சி

Bachelor to married man

திருமணத்திற்கு முன் கிரிக்கெட் மட்டுமே ஓடும் டிவியில், திருமணத்திற்கு பின் சீரியல், கார்டூன் மட்டுமே ஓடும் 😊!

 

பயணம்

Bachelor to married man

ருக்கு போக வேண்டுமா, எடு ஒரு பேகை, கிளம்பு என இருக்கும் பேச்சலர் வாழ்க்கை, மனைவி, குழந்தைகள் என்று வந்த உடனே மொத்தமாக மாறி போகும்!

சுருக்கமாக சொன்னால், திருமணத்திற்கு பிறகு பயண நேரங்களில் பலு தூக்கும் வீரராகாவும், பொறுமை நிறைந்த கர்ம யோகியாகவும் மாற வேண்டியது மிக அவசியம் 😊.

 

உடற்பயிற்சி

திருமணத்திற்கு முன் ஜாகிங், ஜிம் என பிரத்தியேகமாக செய்யப் படும் உடற்பயிற்சிகள் திருமணத்திற்கு பின் தேவையே படாது!!!!!

வாரத்திற்கு ஒரு முறை ஷாப்பிங் சென்றாலே உங்களுக்கு வேண்டிய உடற்பயிற்சி கிடைத்து விடும் 😊!!!

 

வேகம் விவேகம் அல்ல!!!!

Bachelor to married man

திருமணத்திற்கு முன் 125cc பைக், காற்றாக பறக்கும் வேகம் என்பது ஆண்களின் வாழ்வில் சகஜம்.

ஆனால் திருமணத்திற்கு பின் பொறுப்பான கணவராக மாறிவிடுவதால் பைக், கார் ஆக மாறினாலும், பைக் ஆகவே இருந்தாலும் 50kmph limit தான் 😊!

 

தூக்கம்

Bachelor to married man

திருமணத்திற்கு முன் உங்களுக்கே உங்களுக்காக இருந்த படுக்கை இப்போது மனைவி, குழத்தைகள் என அனைவருடனும் பகிரப் படும்.

கவலை வேண்டாம் உங்களுக்கும் கொஞ்சோண்டு இடம் இருக்கும் 😊

 

காசு பணம் துட்டு மனி மனி!!!!

திருமணத்திற்கு முன் நானே ராஜா நானே மந்திரி என வாழும் ஆண்கள் திருமணத்திற்கு பின் க்கும் க்கும் கூஜாவாக மாற வேண்டி இருக்கிறது!!!!!

கணவன் மனைவி இருவருக்கும் அதிக பொறுப்பு வந்துவிடுவதால், கணவனின் மொத்த சம்பளமும் மனைவிக்கே!!!

ஆண்களுக்கு எதுவும் கிடைக்காமல் போவதில்லை. நலல் கணவன், பொறுப்பானவன் என்ற ஸ்பெஷல் பட்டங்கள் கிடைக்கும் 😊.

 

கிச்சன்

Bachelor to married man

திருமணத்திற்கு முன் கிச்சன் எப்போதும் காலியாக இருக்கும் அலல்து வாங்கி வைத்த பொருட்கள் அப்படியே இருக்கும். பிரிட்ஜ் துடைத்து வைத்தது போல காலியாக இருக்கும்!

திருமணத்திற்கு பின் ப்ரிட்ஜில் ஊசி வைக்கவும் இடம் இருக்காது.

என்ன பொருட்கள் இருக்கிறது என்றே தெரியாத அளவிற்கு நிரம்பி வழியும் 😊!

 

உணவு

Bachelor to married man

பிடிக்கிறதோ பிடிக்கலையோ பெரும்பாலான நாட்கள் பாஸ்ட் புட், ஹோட்டல் உணவு என்றே திருமணத்திற்கு முன்பான வாழ்க்கை போகும்.

அதுவே திருமணத்திற்கு பின் பெரும்பாலும் வீட்டு உணவாக மாறி போய்விடும் 😊!!!!

 

ஜாலி ஜாலி!

திருமணத்திற்கு முன் சனி, ஞாயிறு வந்தால், தூக்கம், பார்ட்டி என ஜாலியாக செலவிடலாம்.

திருமணத்திற்கு பின் அதுவே பேமிலி டைமாக மாறி போய் விடும் 😊.

 

வாழ்வில் மாற்றங்கள் ஒன்றே மாறாதது சார்ஜி! 

ரிலாக்ஸ்! ஜாலியாக திருமண வாழ்க்கையை எஞ்சாய் செய்யுங்கள் 😊😊😊!

 

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

{kunena_discuss:1209}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.