(Reading time: 6 - 11 minutes)

குடும்பம் - 💝 உங்களுக்கு பிடித்த வாழ்க்கைத் துணை 👨‍❤️‍👨 எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்று தெரிந்துக் கொள்வோம் வாங்க! 💝

வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வது என்பது கஷ்டமான & ரொம்பவும் முக்கியமான ஒரு விஷயம்.

நாம் எடுக்கும் இந்த ஒரு முடிவு நம் வாழ்க்கையையே மாற்றக் கூடியது.

அப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் போது உங்களுக்கு என்ன பிடிக்கும், உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்று உங்களுக்கே தெளிவு படுத்த தான் இந்த பதிவு.

 

ரு பேப்பர், பென்சில் எடுத்து வச்சுக்கோங்க. ஒவ்வொரு கேள்விக்கு கீழும் கொடுக்கப்படும் a, b, c, d எனும் நான்கு பதில்களில், உங்களுக்கு சரியாக தோன்றும் பதிலுக்கான எழுத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

 

ங்களின் விருப்பங்கள், எதிர்ப்பார்ப்புகளை வைத்து உங்கள் வாழ்க்கைத் துணையிடம் நீங்கள் விரும்புவது என்ன என கண்டுபிடிப்போம் வாங்க.

 

1. உங்கள் எதிர்கால துணையுடன் நீங்கள் செய்ய விரும்பும் ஒரு விஷயம்?

The right person for youa. குடும்பத்தினர் அனைவருக்கும் இவர் தான் என் துணை என்று அறிமுகம் செய்து, அவர்கள் அனைவருடன் ஒன்றாக நேரம் செலவிடுவது

b. அவருடன் அனைத்து நிகழ்சிகளிலும் ஒன்றாக கலந்துக் கொள்வது

c. அவருடன் இது வரை முயற்சி செய்திருக்காத வித்தியாசமான புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பது

d. சின்ன சின்ன விஷயங்களையும் பகிர்ந்து சந்தோஷப்படுவது

 

2. உங்கள் பிரச்சனைகளை உங்கள் துணையிடம் சொன்னால், அவர் எப்படி அதை கையாள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

The right person for youa. நீங்கள் சொல்வதை கவனித்துக் கேட்டு, புரிந்துக் கொண்டு, தன் அன்பால், அணைப்பால் உங்கள் மனதை தெளிவாக்க வேண்டும்.

b. உங்களுடன் அந்த பிரச்சனையை பற்றி விவாதித்து, அதை எப்படி சரி செய்வது என்று யோசித்து ஒரு நல்ல முடிவு கொடுக்க வேண்டும்.

c. சீரியஸாக யோசிக்காமல், நீங்கள் யோசித்தே இருக்காத ஜாலி ஐடியாஸ் கொடுத்து அசத்த வேண்டும்.

d. உங்களை ஆச்சர்யப் படுத்தும் விதமாக ஒரு கவிதை எழுதியோ, ஒரு சினிமா பாடலை பாடியோ உங்கள் மனதை சரியாக்க முயல வேண்டும்.

 

3. உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்ப்பார்க்கும் திறமை என்ன?

The right person for youa. அன்பாய், கனிவாய் இருப்பது

b. பிரச்சனைகளை எளிதாக சரி செய்வது

c. நக்கல், கிண்டல் செய்வது

d. கதை, கவிதை, பாடுவது, வரைவது என தனித் திறமை பெற்றிருப்பது

 

4. உங்களுடைய துணையிடம் உங்களை விவரிக்கும் விதமாக எமொஜி போட சொன்னால், இதில் எதை அவர் தேர்வு செய்வது உங்களுக்கு பிடிக்கும்?

The right person for youa. 💞 (இதயங்கள்)

b. 😍 (இதயத்தை கண்களாக கொண்ட ஸ்மைலி)

c. 🎉(வானவேடிக்கை)

d. 🌇(ரொமாண்டிக் சூரிய அஸ்தமனம்)

 

5. வாழ்க்கை துணை முக்கியம் தான், ஆனால் அவருக்காகவும் நீங்கள் விட்டுக் கொடுக்க விரும்பாத ஒரு விஷயம்?

The right person for youa. அப்படி ஒரு விஷயமும் இல்லை. எதையுமே நான் விட்டுக் கொடுப்பேன்.

b. என் வேலை தொடர்பான இலட்சியங்கள்

c. என்னுடைய சுதந்திரம்.

d. என்னுடைய லைஃப்ஸ்டைல் மற்றும் இசை, கதை, கவிதை என எனக்கான தனி விருப்பு, வெறுப்புகள்.

 

6. உங்கள் வருங்கால துணையை பற்றி அவருடைய குடும்பத்தினரும், நட்பு வட்டமும் இதில் எதை சொன்னால் உங்களுக்கு பிடிக்கும்?

The right person for youa. எப்போதும் கை கொடுத்து உதவுபவர்

b. பெரிய ஆள்

c. வாலு

d. ரோமியோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.