(Reading time: 3 - 6 minutes)
5 Tips to Help When You're Angry at Your Spouse!
5 Tips to Help When You're Angry at Your Spouse!

ஒரே மாதிரியான உடல் வாசனை உறவுகளை வளர்க்குமாம்!

 

உங்கள் வாழ்க்கைத் துணை மீது கோபம் கொப்பளிக்கும் போது உதவும் 5 டிப்ஸ்!

  

1. சுவாசிக்கவும்.

எக்ஸர்சைஸ், யோகா கிளாஸ்களில் சொல்வதுப் போல “ப்ரீத்”!

 

எந்த காரணத்திற்காக நீங்கள் கோபப் பட்டிருந்தாலும், முதலில் உங்களை கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம்.

  

நமக்குள் கோபம் பெருகும் போது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களால், நம் உடல் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாக நினைக்கத் தொடங்கும். எனவே உடனடியாக நம்மை பாதுகாக்கக பல டெக்னிக்குகளை கையில் எடுக்கும் அவற்றில் ஒன்று வேகமாக மூச்சு விடுவது!

  

நன்றாக மூச்சை இழுத்து விட்டு, உங்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை உங்கள் உடலுக்கு சொல்லி, முதலில் அதை ரிலாக்ஸ் செய்யுங்கள்.

 

2. கோபத்தில் எகிறி குதிக்கும் இதயத் துடிப்பைக் குறைக்க முயலுங்கள்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, என்று சொல்லிக் கேள்வி பட்டிருப்பீர்கள். அது அறிவியலின் படியும் உண்மை தான்!

  

நம் இதயம் வழக்கத்திற்கு மாறாக வேகமாக துடிக்கும் போது, நமது மூளையால் ஆக்கப்பூர்வமான, மோதலைத் தீர்க்கும் பகுதிகளை சீராக இயங்க முடியாது.

  

ஏனென்றால், இப்போதும் வேக இதய துடிப்பால் உயிருக்கு ஆபத்தோ என்ற கேள்வி மூளைக்கும் ஏற்பட்டிருக்கும். அதை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு அது முக்கியத்துவம் கொடுக்கும்.

  

எனவே முன்பு போல ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து இதய படபடப்பை குறையுங்கள்.

  

இதயம் சீராக துடிக்க தொடங்கினால், மூளை சீராக இயங்கும். தற்போதைய சுழலை புரிந்து, அதற்கு ஏற்ப, ஆக்கப்பூர்வமாக சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகளை யோசிக்க உதவும்.

  

3. நேரம் பொன்னானது!

இப்போதும் உங்கள் கோபம் கொதிக்கும் ஸ்டேஜிலேயே இருந்தால் உடனடியாக கோபத்தை கொட்டித் தீர்க்காமல் சின்ன டைம் ப்ரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.

  

இப்படி ப்ரேக் எடுப்பது நீங்கள் ஓடி ஒளிவதாக அர்த்தத்தை கொடுக்காது. மாறாக கோபத்தில் தேவை இல்லாத வார்த்தைகளை, செய்கைகளை செய்து விடாமல் உங்களை தடுக்கும்.

 

“உனக்கு ப்ரேக் வேண்டும்,” என அடுத்தவரிடம் சொல்லாது, “அரை மணி நேரத்துல பேசலாம்,” என சொல்லுங்கள்.

 

அப்படி ப்ரேக் எடுக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  

கோபம் பொங்கும் குறுகிய கவனம் இருக்கும் மன நிலையிலிருந்து அமைதியான, நம்பிக்கைக்குரிய மன நிலைக்கு மாறுங்கள்.

  

4. அமைதியாக பொறுமையாக யோசியுங்கள்

டைம் ப்ரேக்கில் இருக்கும் போது நடந்ததையே ரிபீட் மோடில் போட்டு கொண்டிருக்காமல் முடிந்த அளவு அமைதியாக யோசியுங்கள்.

  

உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்களை, உங்களுக்கு நடுவே நினைவில் இருக்கும் தருணங்களை யோசியுங்கள்.

  

மனம் அமைதியானதும் பொறுமையாக என்ன நடந்தது, யார் மீது தவறு, ஏன் என்று யோசியுங்கள்.

  

5. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

உங்களுக்கு ஏன் கோபம் வந்தது, எது உங்களை புண் படுத்தியது என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்துங்கள்.

 

உங்கள் வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள், செய்கைகள் எப்படி உங்களை புண்படுத்தியது என்பதையும் தெளிவாக சொல்லுங்கள்.

  

மன்னிப்பை ஏற்க (அ) சொல்ல தவறாதீர்கள்!

  

எந்த உறவும் சீராக செல்ல இரு வழி முயற்சி அவசியம். எனவே உங்கள் துணையிடம உங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை சொல்லுங்கள்.

 

“நீ ஒரு தாங்க்ஸ் (அ) சாரி கூட சொல்லலை,” என்று நேரடியாக சொல்லுங்கள். அதில் தவறு ஒன்றுமில்லை!

 

அடுத்து கோபம் பொங்கும் போது, இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி பாருங்கள்!

 

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.