(Reading time: 3 - 5 minutes)

குடும்பம் - சிறிய குழந்தையின் வளர்ச்சி அடையாளங்கள்

Baby growth

சின்ன குழந்தைகளை போல மனதை மயக்கும் விஷயம் ஒன்றுமில்லை!

அவர்களின் சிரிப்பும், மழலையும் எல்லாவிதமான வலிகளுக்கும் சிறந்த நிவாரணி.

 

ம் குழந்தைகளை ரசிப்பதுடன், அவர்களின் வளர்ச்சியின் மீதும் நாம கவனம் செலுத்துவது அவசியம்.

 

குழந்தைகள் இந்தந்த மாதத்தில் இதை எல்லாம் செய்தே ஆக வேண்டும் என்று இல்லை என்றாலும், தோராயமாக மருத்துவர்களும் பெரியவர்களும் சொல்லும் வளர்ச்சி அடையாளங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

 

2 முதல் 4 மாதம்

அம்மாவையும் அப்பாவையும் அடையாளம் தெரிந்துக் கொள்வார்கள்.

சின்னதாக புன்னகை செய்யவும் தொடங்குவார்கள்.

 

3 முதல் 4 மாதம்

வண்ணமயமான பொருளை குழந்தையின் முன் காண்பித்து ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் கொண்டு சென்றால் குழந்தையின் கண்களும் அதே திசையில் தொடரும்.

 

4 முதல் 5 மாதம்

குழந்தையின் தலை பலமாகி தானாக நிற்க தொடங்கும்.

 

5 மாதம்

சத்தம் வரும் திசையை திரும்பி பார்ப்பார்கள்.

இந்த நேரத்தில் சத்தம் வரும் விளையாட்டு பொருட்களை வாங்கி மெல்லிய சத்தத்தை உண்டாக்கலாம்.

குழந்தைகள் சத்தமாக சிரிப்பது, மகிழ்ச்சியை வெளி காட்டுவது போன்றவற்றையும் செய்வார்கள்.

 

6 மாதம்

குழந்தை குப்புற படுக்க தொடங்கும் காலம்.

 

7 – 8 மாதம்

பக்கபல துணை எதுவும் இல்லாமல் குழந்தை உட்கார தொடங்கும் காலம்.

 

8 மாதம்

மெல்ல பேச தொங்குவார்கள்.

அம்மா (ம்ம்மா), தாத்தா (த்தா), அத்தை (த்தை) என பேச சுலபமான உறவு முறைகளை சொல்ல தொடங்குவார்கள்.

மேலும் இந்த மாதத்தில் புதியவர்களை புரிந்துக் கொள்வார்கள்.

அப்படி புதியவர்கள் யாரேனும் தூக்கினால் அல்லது கொஞ்சினால் அழுவார்கள்.

 

9 – 10 மாதம்

மெல்ல தவழ ஆரம்பிப்பார்கள்

 

10 – 12 மாதம்

உறுதியான பொருட்களை பிடித்து மெல்ல மெல்ல நிற்க பழகுவார்கள்.

 

13 மாதம்

தானாகவே நடக்க பழகும் காலம்

 

15 – 24

கைகளை அல்லது சுவரை பிடித்த படி படிக்கட்டுகளில் இறங்க கற்று கொள்வார்கள்.

தானே உணவு உண்ணவும் இந்த நேரத்தில் ஆர்வம் காட்டுவார்கள்.

 

24 மாதம்

வாக்கியங்கள் அமைத்து பேச தொடங்குவார்கள்.

 

ங்கள் குழந்தை இவற்றை சற்றே முன்னே பின்னே செய்தால் தவறில்லை. ஆனால் எந்த விதமான வளர்ச்சி அடையாளத்தையும் காட்டாமல் இருந்தால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது நலம்.

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.