(Reading time: 2 - 3 minutes)

ஜோக்ஸ் - உனக்கு தான்ப்பா A+! - அனுஷா

fun

சைகாலஜி வகுப்பில் ப்ராக்டிகல்ஸ் நடந்துக் கொண்டு இருந்தது.

புரபசர்  ஒரு கூண்டின் நடுவே இருந்த ஆண் எலி ஒன்றை வகுப்பிற்கு காட்டினார்.

பின் அவரே ஒரு துண்டு கேக்கை ஒரு பக்கம் வைத்து விட்டு, இன்னொரு பக்கத்தில் ஒரு பெண் எலியை வைத்தார்.

 

ஆண் எலி சுறுசுறுப்பாக ஓடி கேக்கை எடுத்து சாப்பிட்டது.

புரபசர் கேக்கிற்கு பதிலாக ப்ரெட் வைத்தார். அப்போதும் அந்த ஆண் எலி ப்ரேட்டை நோக்கியே ஓடியது.

 

வேறு வேறு உணவுகளை வைத்து இதே சோதனையை தொடர்ந்தார் புரபசர்.

ஒவ்வொரு முறையும் உணவின் பக்கமே சென்றது அந்த ஆண் எலி. ஒரு முறைக் கூட பெண் எலியின் பக்கம் போகவில்லை.

 

சோதனையை முடித்த புரபசர், மாணவர்களிடம், " இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், உணவை போல ஒரு உயிரை ஈர்க்கும் விஷயம் ஒன்றுமே இல்லை..." என்றார்.

 

லாஸ்ட் பெஞ்சில் இருந்து ஒரு குரல்....

"சார், ஏன் நீங்க அந்த பெண் எலியை மாற்றி இதே சோதனையை செய்து பார்க்க கூடாது? இது ஒருவேளை இந்த ஆண் எலியோட மனைவியோ என்னவோ...!"

 

குரல் கொடுத்த மாணவனை ஆச்சர்யமாக பார்த்த புரபசர்,

"உனக்கு தான்ப்பா A+!" என்றாரே பார்க்கலாம்!!!!

innocentinnocent

tongue-outtongue-out

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.