(Reading time: 2 - 3 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - என்னைக் காப்பாத்திட்டீங்க! 🙂 - அனுஷா

   

இளைஞன் ஒருவன் பாரில் அமர்ந்திருந்தான். அவன் பார்வை அவனுக்கு எதிரே இருந்த க்ளாசில் இருந்த பானத்திலேயே இருந்தது.

   

அரை மணி நேரத்திற்கும் மேலாக அவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

   

தினம் தினம் குடித்து விட்டு கலாட்டா செய்யும் சோமு அங்கே வந்தான். இளைஞன் எதிரே இருக்கும் க்ளாசையே பார்த்துக் கொண்டிருப்பதை அவனும் பார்த்தான். அந்த க்ளாஸை எடுத்து அதில் இருந்ததை ஒரே மடக்கில் குடித்து முடித்தான்.

   

அவ்வளவு தான், இளைஞன் அழத் தொடங்கினான்.

  

“அழாதேப்பா. நான் சும்மா எடுத்து குடிச்சேன். உனக்கு நானே வாங்கி தரேன்,” என சமாதானம் செய்ய முயற்சி செய்தான் சோமு.

   

இளைஞனோ கண்ணை துடைத்துக் கொண்டான்.

  

“இல்லை, அது இல்லை. இன்னைக்கு ரொம்பவும் மோசமான நாள். நான் லேட்டா தூங்கி எழுந்தேன். அதனால வேலைக்கு லேட்டா போனேன். என் முதலாளி என் சீட்டை கிழிச்சு அனுப்பிட்டார். அங்கே இருந்து வரும் போது எவனோ என் பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டான். எப்படியோ வீட்டுக்கு போனேன். அங்கே என் பொண்டாட்டி அவளோட பழைய காதலனை கட்டிப் பிடிச்சு, சிரிச்சு கதை பேசிட்டு இருக்கா. வாழ்க்கையே வெறுத்துப் போய் இந்த பாருக்கு வந்தேன். இனிமேல் வாழ்ந்து பிரயோஜனம் இல்லைன்னு முடிவு செய்து விஷம் குடிக்க நினைச்சப்போ, நீங்க நடுல வந்து விஷத்தை குடிச்சு என்னைக் காப்பாத்திட்டீங்க.”

   

சோமு - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.