Jokes - Vindhya
"மாமா, கோபத்துல உங்க பொண்ணை கன்னத்துல அறைஞ்சுட்டேன்''
""இருக்கட்டும் மாப்ளே... இப்ப எந்த ஆஸ்பத்ரில அட்மிட் ஆகியிருக்கீங்க?''

ஒரு புலி தன் கல்யாணத்துக்கு காட்டுல எல்லா விலங்குகளுக்கும் இன்விடேஷன் கொடுக்க போச்சு...
அப்போ அங்கே ஓடி வந்த ஒரு பூனை பயங்கரமா உருண்டு உருண்டு சிரிச்சது....
பயங்கர காண்டான புலி, ஏண்டா சிரிக்குறேன்னு கேட்டுச்சு.
அதுக்கு அந்த பூனை கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி கிட்டு நானும் கல்யாணத்துக்கு முன்னாடி புலியா தான் இருந்தேன்டான்னு சொல்லிட்டு ஓடிப் போயிருச்சு
ஒரு நாள் ஆசிரியர் ... ஒரு கேள்வி கேட்டார்.
""ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''
""வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான், ஒரு மாணவன்.
""ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான், இன்னொரு மாணவன்.
""பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''
""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''
""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.
பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.
இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்.
ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.
அவ்வாறு பாராட்டுப் பெற்ற மாணவர்
வேறு யாருமில்லை.
நான் தான்....
வணக்கம்....நமக்கு இந்த வெளம்பரமே புடிக்காது்......
ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம்.
அவனுக்கு சாவே வரக் கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.
ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம்.
“பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்.
குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக் கூடாது” ன்னு கேட்டானாம்.
“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போயிட்டாராம்.
குப்புசாமி ரொம்ப சந்தோஷமாகி வீட்டுக்கு போயிட்டு இருந்தானாம்.
வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன”ன்னு கேட்டாராம்.
அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்ல முடியாம “குப்பிமி” “குப்புமி” ன்னு சொன்னானாம்.
பாவம் கடைசி வரை அவனுக்கு “சா”வே வரலையாம்.
சாமியின் background voice...
“வரம் கேட்குற உனக்கே இவ்வளவு இருந்தா கொடுக்குற எனக்கு எவ்வளவு இருக்கும்....!”

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.