(Reading time: 3 - 5 minutes)

Jokes - Jansi 

fun

 

நேற்று ராத்திரி ஒரு பன்னிரெண்டு மணி இருக்கும். அப்ப தான் அந்த அற்புதமான கானம் என் காதில் விழுந்தது. அதோட அர்த்தத்தை ஆழமா சிந்திச்சதில் மீதி ராத்திரிக்கு என் தூக்கமே போச்சு. படக்குன்னு எழுந்து உட்கார்ந்திட்டேன்ல

*ஆலுமா டோலுமா ஈஸாலங்கடி மாலுமாபேச்சு கலீஜ்ஜின்னா கிராக்கி விட்டா சாலுமா அரிகல்லுதெரிகல்லு கொத்து விட்டா கலக்கலு*

அதாவது ஆல் என்றால் ஆல மரம். டோல் என்பது டோலக்கு செய்ய உதவும் கடம்பு மரம். ஒரு இடத்தில் ஆல மரமும் கடம்பு மரமும் இருக்கும்மா.

ஈஸாலங்கடி என்பதை ஈ= இந்த + ஸால்=சாலை + அங்காடி = கடை என்று பிரித்து அர்த்தம் கொள்ள வேண்டும். மாலும்மா என்றால் திருமால். திருமால் = பெருமாள் என்ற பெயரை குறிக்கும்

அதாவது எல்லாவற்றையும் சேர்த்தால் ஆலமரமும், கடம்பு மரமும் இருக்கும் இந்த சாலையில் அங்காடி வைத்திருக்கும் பெருமாள் என்ற வியாபாரியே என்று பொருள் கொள்ள வேண்டும்

பேச்சு கலீஜ் என்றால் கடைக்கு கொள்முதல் செய்ய வரும் நபர் பொருளின் விலையை ரொம்ப குறைச்சு கேட்டு கன்றாவியா பேசினால் என்று பொருள்
அப்படி கட்டுப்படியாகாத விலைக்கு கேட்கும் பார்ட்டியை விட்டால் சாலுமா. சாலுமா என்றால் போதும்மா என்று பொருள்.

இது வரை ஒரு கருத்து முடிஞ்சது. இப்ப எல்லாத்தையும் சேர்த்து பாருங்க. ஆலமரமும், கடம்பு மரமும் இருக்கும் இந்த சாலையில் அங்காடி வைத்திருக்கும் பெருமாள் என்ற வியாபாரியே உன்
கடைக்கு பொருள் வாங்க வரும் நுகர்வோர் உனக்கு கட்டுப்படியாகாத விலைக்கு பொருளை கேட்டால் அவரிடம் நீ வியாபாரம் செய்யாமலிருப்பதே சிறந்த செயல்

அரிகல்லு என்றால் அரிதான கல். பவளம், வைரம் அந்த மாதிரி அரிதான கல்.

தெரிகல்லு என்றால் தெரு ஓரத்தில் கிடக்கும் கருங்கல். கொத்து விட்டா கலக்கலு என்றால் கருங்கல்லை கொத்துவது.

அதாவது சிற்பி சிலை வடிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும்.

இப்ப இரண்டாவது கருத்தை எல்லாரும் சேர்த்து பாருங்க. தெரு ஓரத்தில் கிடக்கும் கருங்கல்லை போன்று உன்னை நீ கேவலமாக நினைக்காதே. தன்னிடமிருக்கும் வேண்டாத எண்ணங்களை அறிவு என்னும் சிற்பி கொண்டு உன்னிடமுள்ள வேண்டாத எண்ணங்களை நீ கொத்திவிட்டு நீக்கினால் உன் மதிப்பு அரிதான கற்களான வைரம், பவளம், புஷ்பராகம் போல் உயர்ந்து விடும்.

*ச்சேய் எப்பேர்ப்பட்ட உயர்ந்த பாட்டு! முதலில் கேட்கும் போது இதெல்லாம் ஒரு பாடலா?* இதை எழுதினவன், பாடியவன், இந்த பாட்டிற்கு ஆடியவன் என்று எல்லாவனையும் கட்டை விளக்கமாத்தால அடிக்கணும் னு நினைச்சேன். நல்ல வேளை நான் அந்த தவறை செய்யவில்லை.

*தமிழை எப்படியாவது வளர்த்துடுவோம்ல*

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.