(Reading time: 2 - 4 minutes)

ஜோக்ஸ் - நாங்கள்லாம் யாரு :-) - அனுஷா

fun

மைக்ரோசாப்ஃடிற்கு தலைவர் தேர்ந்தெடுக்க ஒரு பெரிய ரெக்ரூட்மென்ட் மீட்டிங் நடத்தினார் பில் கேட்ஸ்!

ஐயாயிரத்திற்கும் அதிகமான பேர்கள் அந்த மீட்டிங்கிற்கு வந்திருந்தார்கள். அப்படி அங்கே வந்திருந்தவர்களில் மிஸ்டர் நாயரும் ஒருவர்.

பில் கேட்ஸ்: மைக்ரோசாஃப்ட் தலைவராக உங்கள் அனைவருக்கும் இருக்கும் ஆர்வத்திற்கு நன்றி. உங்களுக்கு டாட் நெட் (.NET) தெரியாது என்றால் நீங்கள் இப்போதே இங்கிருந்து கிளம்பலாம்...

கிட்டத்தட்ட 2000 பேர் அந்த அறையை விட்டு சென்றார்கள்.

மிஸ்டர் நாயருக்கும் டாட் நெட் தெரியாது. ஆனாலும் தனக்குள்ளே, ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பதால் என்ன ஆக போகுது’ன்னு யோசித்து அங்கேயே இருந்தார்.

பில் கேட்ஸ்: நூறு பேருக்கு மேலே மேனேஜ் செய்திருக்காதவங்க இங்கிருந்து கிளம்பலாம்...

இன்னும் ஒரு 2000 பேர் அந்த அறையை விட்டு சென்றார்கள்.

மிஸ்டர் நாயர் ஒருவரை கூட மேனேஜ் செய்ததில்லை... ஆனாலும் இருந்து தான் பார்ப்போமே என்று அமைதியாக இருந்தார்.

பில் கேட்ஸ்: மேனேஜ்மென்ட் டிகிரி இல்லாதவங்க எல்லோரும் இங்கிருந்து கிளம்பலாம்...

மேலும் ஒரு 500 பேர் அந்த அறையை விட்டு சென்றார்கள்.

மிஸ்டர் நாயர் செகன்ட் கிளாஸ் பி.எஸ்சி... ஆனாலும் என தான் ஆகுதுன்னு  பார்ப்போமேன்னு அங்கேயே இருந்தார்.

பில் கேட்ஸ்: ஜப்பானிய மொழி பேச தெரியாதவங்க எல்லோரும் கிளம்புங்க...

498 பேர் அந்த அறையை விட்டு சென்றார்கள்.

மிஸ்டர் நாயருக்கும் ஜப்பானிய மொழி தெரியாது. ஆனாலும், ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பதால் என்ன ஆக போகுது’ன்னு மீண்டும் யோசித்து அங்கேயே இருந்தார்.

இப்போது மிஸ்டர் நாயரும் இன்னும் ஒருவர் மட்டுமே அந்த அறையில் மிஞ்சி இருந்தார்கள்.

அவர்கள் இருவரின் அருகே வந்த பில் கேட்ஸ்,

“உங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் ஜப்பானிய மொழி தெரிந்திருக்கு... எங்கே இரண்டு பேரும் அந்த பாஷையில பேசுங்க பார்ப்போம்” என்றார்.

மிஸ்டர் நாயர் கொஞ்சம் கூட தயங்காமல், அமைதியாக அடுத்த நபரை பார்த்து,

“நாட்டில் எவ்டா?” என்றார்.

அடுத்தவர்,

“பாலக்காடு” என்றார்.

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.