(Reading time: 5 - 9 minutes)

2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு கீதம் சங்கீதம்....- 11 - தேவி

Ranga Puravihara

ணக்கம் தோழமைகளே..

இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் கீதம் சங்கீதம் தொடரின் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..

முதலில் தமிழ் புத்தாண்டு பற்றி பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் சூரியனில் பன்னிரு கோள்களும் பயணிப்பதையே தமிழ் மாதங்களாக பிரித்து இருக்கிறார்கள். அதில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பயணிப்பதே சித்திரை மாதம் ஆகும். தமிழ் மாதங்கள் மூன்று மூன்று மாதங்களாக பிரிக்கப்பட்டு அவையே கோடை, வசந்தம், கார், குளிர் கால பருவங்களாக முறையே சித்திரை, ஆடி, ஐப்பசி, தை என பிரித்து கணக்கிட்டனர்.

சித்திரை முதல் நாளை புது வருட ஆரம்பமாக கொண்டு ஒவ்வொரு பகுதி மக்களும் மங்களகரமாக அந்த ஆண்டு இருக்க வேண்டும் என்று ஆரம்பிக்கின்றனர்.

தமிழ் நாட்டில் தமிழ் வருடபிறப்பு அன்று விசேஷமாக சமைத்து, கோவில் சென்று கடவுள் வழிபாடு செய்கின்றனர். வாழ்க்கையில் இனிப்பு, கசப்பு, புளிப்பு என்று எல்லாம் வரும்.. அவை அனைத்தும் கடந்து போகும் என்று எண்ணத்தை வெளிப்படுத்தவே மற்ற சாப்பாடு வகைகளோடு மாங்காய், வேப்பம்பு , மிளகாய், வெல்லம் என எல்லாம் கலந்து பச்சடி செய்கின்றனர்.

அதே போல் கேரள பகுதி மக்கள் விஷு கனி என்று எல்லா வகை காய், பழங்கள், அரிசி, பருப்பு, பணம் எல்லாம் கண்ணாடி முன் வைத்து சித்திரை முதல் நாள் காலை எழுந்தவுடன் அதை கண்ட பின்பே அந்த ஆண்டை வரவேற்கின்றனர். இத்தகைய வழிபாட்டுக்கு விஷு கனி காண்பது என்று பெயர் சூட்டியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் சொந்தங்களின் இல்லத்திற்கு சென்று விஷு கனி கண்டு மகிழ்கின்றனர்.

இந்த சித்திரை நன்னாளில் அந்த பெரிய பெருமாள் என்று கொண்டாடப்படும் ஸ்ரீரங்கனை புகழ் பாடும் முத்துசுவாமி  தீக்ஷிதரின் ரங்கபுரவிகாரா கீர்த்தனை பிருந்தாவன சாரங்க ராகத்தில் அமைந்த இந்த பாடலை எம்.எஸ். அம்மா குரலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

தீக்ஷிதர் கர்னாடக சங்கீத இசை மும்மூர்த்திகளில் ஒருவர்.. அவரின் இசை உருவாக்கம் பற்றி கேட்க வேண்டுமா... அந்த இசையை நம் எம்.எஸ். அம்மா அனுபவித்து பாடும் போது அந்த ரெங்க நாதரே நம் கண் முன் இறங்கி  வருவார்.

எம்.எஸ். அம்மாவின் கர்னாடக இசை பாடல்கள் அநேகம்.. அதில் அவரின் முத்திரை பாடல்கள் என்று சில உண்டு.. குறை ஒன்றும் இல்லை, ஸ்ரீமன் நாராயண, பஜகோவிந்தம், வைஷ்ணவ ஜனதோ போன்ற பாடல்கள் அவரை தவிர இன்னொருவாரால் பாட முடியுமா என்று தோன்றும்.. அந்த வரிசையில் நான் விரும்பி கேட்கும் பாடல் ரெங்கபுர விஹாராவும் ஒன்று..

மகாவிஷ்ணுவின் வைகுண்ட கோலத்தை பூலோகத்தில் காண்பதற்கு என்றே தோன்றியது தான் ஸ்ரீரங்கம்.. பெருமாளின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் முதாலவதாக கருதப்படுவது ஸ்ரீரங்கம் தான்.. ஸ்ரீரங்கன் தோன்றிய காலம் என்பது கணக்கிட முடியாத அளவிற்கு பழமை வாய்ந்தது.  ஏழு கோபுர வாயில்கள் கொண்டது.. ஒரு மிக பெரிய படை எடுப்பை சமாளிக்கும் அளவிற்கு  பெரிய கோவில்..  

வைணவ சமயத்தினர் கொண்டாடும் பெரிய பெருமாள், பெரிய கோவில், பெரிய மடப்பள்ளி என அனைத்துமே இந்த ஸ்ரீரங்கம் ரெங்க நாதரை சேர்ந்தது தான்.. உலகத்துக்கே படியளப்பவனின் கோவிலும் பெரிதாகதனே இருந்தாக வேண்டும்.

சிவா, வைணவ பேத காலத்தில் இருந்து, மொகாலாயர் படையெடுப்பு, ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு என்று அத்தனை இடர்களையும் பார்த்தது ஸ்ரீரங்கம் கோவில்.. ஆனால் இன்றும் பூலோக வைகுண்டமாக அது கருதப்படுகிறது எனில் அந்த ரெங்கனின் புகழை பாட வேறு எதுவும் காரணம் வேண்டுமோ..

ஸ்ரீரங்கத்தின் அழகை நம் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒரே வரியில் பாடியிருப்பார்.

“காவிரி பூம்பொழில் சோலையில் நடுவினில் கருமணி துயில்கின்றது.

கண்ணனின் நித்திரை வண்ணத்தை காட்டிட ஸ்ரீரங்கம் தெரிகின்றது”

என்ன அழகான வரிகள்.

அப்பேற்பட்ட ஸ்ரீரங்கனின் பாடலானா ரங்காபுர விஹாராவிற்கான அர்த்தம்.. எனக்கு தெரிந்த வரையில் இதோ

“ஸ்ரீரங்கம் நகரில் குடியிருக்கும் இறைவனே.. கோதண்டத்தை வில்லாக கொண்டு ராமவாதரம் எடுத்த ரகுகுல நாயாகனே.. மன்மதனின் சொருபம் கொண்ட பிருந்தாவனத்தின் நாயகன், மகாலக்ஷ்மிக்கு பிரியமானவனே , கருநீல வண்ணனே, கருடனை வாகனமாக கொண்டவனே.. கருணை கொண்டவனே.. நல்லவற்றிற்கு துணை நிற்பவனே..

தாமரை முகம் கொண்ட சூரிய வம்சத்தவனே.. சந்திரனை கீரிடமாக அணிந்தவனே.. சீதாதேவியை தன் இடது புறத்தில் தாங்கியவனே, ஆதிசேஷனை படுக்கையாக கொண்டவனே... கண்ணாடியை போன்ற களங்கமில்லாத கன்னங்களை உடையவனே, சூரிய, சந்திரரை கண்களாக கொண்டு கருணை கொண்டு பார்ப்பவனே.. முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் சங்கடம் என்றால் துணை நிற்பவனே.. கோவிந்தா, வெங்கடரமணா, முகுந்தா என்று எப்படி அழைத்தாலும் துன்பத்தில் காப்பவனே.. குருகுஹனே .. எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்க வேண்டும் ரெங்கநாதனே ”

இந்த அர்த்தத்தை வரிகளாக கொண்ட பாடல் வரிகள் ஆங்கிலத்திலும், எம்.எஸ். அம்மாவின் குரல் இனிமையை உணர அந்த பாடலும் உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன்..

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .. எல்லா வளமும், நலமும் அந்த இறைவன் அருளால் அனைவருக்கும் கிடைக்கட்டும்..

பாடல் வரிகள்

Ragam: Brindavana Saranga (22ndth Mela janyam)

AROHANA: S R2 M1 P N3 S || AVAROHANA: S N2 P M1 R2 S || (G2 R2 G2 S )

Talam: Rupakam

Composer: Mutthuswami Dikshitar

Version: M.S. Subbalakshmi

 

Pallavi:

Rangapura Vihara Jaya Kodanda Raamaavataara Raghuvira Sri

 

Anupallavi:

Angaja Janaka Deva Brndavana Saarangendra Varada Ramanta Ranga Shyamalaanga Vihanga Turanga Sadayapanga satsanga

 

Charanam:

Pankajaptakula Jalanidhi Soma Vara Pankaja Mukha Pattabhirama

Pankaja Jitakama Raghurama Vaamaanka Gata Sitavara Vesha

Shaanka Shayana Bhakta Santhosha Enaankaravinayana Mrudutara bhaasha Aka Lanka Darpana Kapola Visesha Muni

Sankata Harana Govinda Venkata Ramana Mukunda

 Sankarshana Mula Kanda Sankara Guruguhananda

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 10

Geetham... Sangeetham - 12

{kunena_discuss:1092}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.