(Reading time: 5 - 9 minutes)

2019 புத்தாண்டு சிறப்பு கீதம் சங்கீதம்....- 16 - தேவி

god

லோ பிரெண்ட்ஸ்,

ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் கீதம் சங்கீதத்தில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த முறை நான் எடுத்துக் கொண்ட விஷயம் டிசம்பர் சீசன் அல்லது சென்னை இசைத் திருவிழா.

1927ல் மெட்ராஸ் மியூசிக் அகாடமி தொடங்கப்பட்டது. அதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் இசைத் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.

இசைத் திருவிழா என்றாலும் இங்கே அனைத்துக் கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது. நாடகம், பரதம், கதா கலாட்சேபம் எல்லாமே இந்த டிசம்பர் சீசனில் சென்னை கலை மன்றங்களில் நடத்தப் படுகிறது.

தேவர்களுக்கு அதிகாலை என்பது மார்கழி மாதமே. அந்த நேரத்தில் அவர்கள் இறைவனை வழிபடுவார்கள் என்ற நம்பிக்கை. அதே நேரம் மனிதர்களாகிய நாமும் இறைவனை வணங்கி வழிபட்டால் உடல், மனம் இரண்டுக்கும் ஆரோக்கியம்.

இறைவனை வழிபடும் முறைகள் பல. அபிஷேகம், நாம ஜெபம், ஆராதனை என வணங்குகிறோம். அதில் இசையால் ஆராதிப்பது, இசைப்பவர் மட்டுமில்லாமல், கேட்பவர்களும் கடவுளின் ஆசிகள் கிடைக்கச் செய்யும் வல்லமை மிக்கது.

திரு என்ற அடைமொழி மிக உயர்ந்தவற்றுக்கு மட்டுமே கிடைக்கபடுவது. மாதங்களில் நான் மார்கழி என்றான் இறைவன். அதனால் தான் டிசம்பர் இசை விழா என்றாலும், அதில் மார்கழி மாதமும் சேர்ந்து அதைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

எந்த இறைவன் என்ற பேதம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த மார்கழி மாதத்தில் சைவ, வைணவ பேதமின்றி இருவருக்குமே திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப் படுகின்றன.

மியூசிக் அகாடமி ஆரம்பித்த புதிதில் சென்னையில் மயிலாப்பூர் உள்ளிட்ட மிகச் சில இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த இசை விழா, சென்னை நகரத்தின் வளர்ச்சியில் அனேக இடங்களில் நடை பெற ஆரம்பித்தது.

கர்நாடக இசைக் கற்றுக் கொள்பவர்களின் இலக்கு இந்த மார்கழி இசை விழாவில் கச்சேரி செய்வது தான்.

ஆல் இந்தியா ரேடியோவில் முதலில் இசை நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப பட்டது. தொலைக்காட்சியின் வரவிற்கு முன் தினம் ஒருவரின் கச்சேரி அது வாய்ப்பட்டு அல்லது வாத்திய இசை என ஏதோ ஒரு வடிவில் ஆகாசவாணி ஒலிபரப்பிக் கொண்டு இருந்தார்கள்.

தூர்தர்ஷன் வரவிற்குப் பின் இசைக் கச்சேரி என்றால் எப்படி இருக்கும் என காட்சி வடிவில் காண்பிக்கப் பட்டது. அதுவரை கோவில்களில் மட்டுமே இசைக் கச்சேரிகள், நாடகம், கதாகாலட்சேபம் முதலியவை பார்க்க முடியும்.

தனியார் சேனல்கள் வரவிற்குப் பின் இந்த இசை விழா திருவிழாவாக மாறி விட்டது. ஒவ்வொரு சேனலும் ஸ்பொன்சர் செய்வதோடு, அதை ஒளிபரப்புவதிலும் முனைப்பாக இருக்கின்றனர்.

காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை இசைக் கச்சேரிகள் நடக்கின்றன.

நல்ல பிரபலமானவர்களை சபாக்களே ஏற்பாடு செய்து விடுவார்கள். வளரும் கலைஞர்கள் வாய்ப்புத் தேடி சபாக்களை அணுகுவார்கள்.

ப்ரைம் டைம் எனப்படும் மாலை நாலு மணி, ஆறு மணி, எட்டு மணி ஸ்லாட்களை பிரபலமான கலைஞர்கள் பெற்றுக் கொள்ள, மற்ற நேரங்களை வளரும் கலைஞர்களுக்கு கொடுப்பார்கள்.

வளரும் கலைஞர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு மூன்று, நான்கு வருடங்களில் ப்ரைம் டைம் ஸ்லாட்கள் பெற்றுக் கொள்வார்கள்.

முன்பு எல்லாம் ஓரளவு பிரபலமான கீர்த்தனைகள் பாடிக் கொண்டு இருந்தார்கள். தற்போது ஒவ்வொரு கலைஞரும் தீம் அதாவது ஒரு தலைப்பு வைத்துக் கொண்டு பாடி வருகிறார்கள்.

இதில் பக்க வாத்தியக்காரர்களுக்கும் நல்ல பலனே. ஒரு சிலர் மட்டுமே தனிக் குழுவாக வருவார்கள். மற்றவர்கள் அந்த அந்த வாத்தியங்களில் புகழ் பெற்றவர்கள் பாடகர்களோடு இணைந்து கொள்வார்கள்.

வீணை காயத்ரி, ராஜேஷ் வைத்யா, சாக்ஸபோன் கதிரி கோபால்நாத், வயலின் கன்யாகுமாரி, கணேஷ் குமரேஷ், மாண்டலின் ஸ்ரீநிவாஸ் இவர்கள் எல்லாம் தனிக் கச்சேரியே செய்கிறார்கள்.

இந்த டிசம்பர் மாதத்தில் இசையால் இறைவனை ஆராதிப்பது மட்டுமின்றி அந்த இசையையே ஆராதிக்கிறார்கள் கலைஞர்கள்.

இந்த இசைத் திருவிழாவில் மற்றும் ஒரு முக்கிய அம்சம் உணவுத் திருவிழா. இசைத் திருவிழாவில் கூடும் கூட்டத்தைக் கண்டு, அங்கே சிற்றுண்டிகளில் ஆரம்பித்து, தற்போது அனைத்து உணவுகளும், அந்தந்த நேரத்திற்கு தகுந்தார் போல் கிடைக்கிறது.

தற்போது அதில் போட்டிக் கூட இருக்கிறது. எந்த சபாக்களில் கச்சேரியோடு சேர்ந்து நல்ல உணவும் கிடைக்கிறதோ அங்கே கூட்டம் அலைமோதுகிறது.

எனக்குத் தெரிந்து வெளியூர், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் இந்த டிசம்பர் சீசன்க்கு வருகை தருகிறார்கள்.

எனக்குத் தெரிந்த சில விவரங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு விட்டேன்.

இனி இந்த பகுதியில் நான் பகிர்ந்து கொள்ளும் பாடல் எப்போ வருவாரோ எந்தன் கலி தீர பாடல்.

இந்தப் பாடலை இயற்றியவர் திரு.கோபாலக் கிருஷ்ணா பாரதியார். இவர் தஞ்சை மாவட்டம் திருவாரூரைச் சேர்ந்தவர்.

தியாகராஜரின் காலத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்கள். நந்தனார் சரித்திரம் இசையாக எழுதியவர்.

அவரின் பாடல்களில் பிரபலமானது எப்போ வருவாரு. தில்லை நாயகன் நடராஜரின் பெயரில் எழுதப்பட்டது.

திரு.உன்னி கிருஷ்ணன் அவர்களின் குரலில் நான் இந்தப் பாடலை முதல் முறை கேட்டேன்,

அந்தப் பாடலின் வரிகளும், பாடலும். இதோ உங்களுக்காக

Eppo varuvaro - எப்போ வருவாரோ

ராகம் : ஜோன்புரி 

இயற்றியவர் : கோபாலக்ருஷ்ண   பாரதியார் 


எப்போ வருவாரோ எந்தன்கலி  தீர 

அப்பர் முதல் மூவரும் ஆளுடை அடிகளும் 

செப்பிய தில்லை சிதம்பரநாதன் ||

 

நற்பருவம் வந்து நாதனை தேடும் 

கற்பனைகள் முற்ற காட்சி தந்தால் ||

அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன் 

போற்பதத்தை காணேன் பொன்னம்பலவாணன் 

(கோ)பாலக்ருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே 

காதல் கொண்டேன் வெளிப்படக்கானேன் ||

இதோ லிங்க்..

 

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 15

Geetham... Sangeetham - 17

{kunena_discuss:1092}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.