(Reading time: 6 - 11 minutes)
Vinayagar chadurthi

விநாயகர் சதுர்த்தி சிறப்பு கீதம் சங்கீதம்... - 19 - தேவி

ணக்கம் நண்பர்களே..

இதோ விநாயகர் சதுர்த்தி சிறப்பு கீதம் சங்கீதம்,

விநாயகர். பிள்ளையார். கணபதி , கஜமுகன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் கடவுள். பிள்ளையாரை முதல் கடவுளாகக் கொண்டு வழிபடுவது இந்து மதத்தில் வழக்கம். எந்தக் கடவுளுக்குப் பூஜை, யாகம் , அபிஷேகம் என்று செய்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டே ஆரம்பிப்பார்கள்.

வரலக்ஷ்மி விரதம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கொஞ்சம் மஞ்சளை தண்ணீர் விட்டுக் கெட்டியாக்கி கூம்பு போன்ற வடிவம் செய்து அதற்கு பிள்ளையார் பிடி என்று பெயர் வைப்பார்கள்.

சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக் கொண்டார். அதற்கு பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்

யானை முகமும், பானை வயிறும் கொண்ட விநாயகர் பிரம்மனுக்கே பாடம் எடுத்தவர். சிவபெருமானைக் காணச் செல்லும் போது அங்கே காவல் இருந்த விநாயகரை கவனிக்காமல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.