(Reading time: 6 - 11 minutes)
Vinayagar chadurthi

முனிவரே எழுதிய பாடல் பிரபோ கணபதே.

திலங் ராகத்திலும் , ஏக தாளத்திலும் அமைந்த இந்தப் பாடல் எளிமையான முறையில் விநாயகரின் சிறப்பையும், அருளையும் விளக்குகிறது.

இந்தப் பாடலை மகாநதி ஷோபனா அவர்களின் குரலில் பகிர்ந்து கொண்டுள்ளேன். மகாநதி படத்தில் கமலின் பெண்ணாகவும் , ஸ்ரீ ரெங்க ரெங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி என்ற பாடலின் பெண் குரலில் பாடியவர் ஷோபனா. கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழ் பாடல்களை அதிக அளவில் பாடுபவர் ஷோபனா.

பாடலுக்கான வரிகளும், பாடல் லிங்க்கும் கீழே கொடுத்துள்ளேன்.

இந்தப் பாடலைக் கேட்டு விநாயகரை வணங்கி அவரின் அருள் பெற வேண்டுகிறேன். மீண்டும் மற்றுமோர் கீதம் சங்கீதத்தில் சந்திப்போம் நண்பர்களே.

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்

சன்னதி சரணடைந்தோமே

சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்

தந்தருள் சற்குரு நீயே—ப்ரபோ

ஆதி மூல கணநாத கஜானன

அற்புத தவள சொரூபா

தேவ தேவ ஜெய விஜய விநாயக

சின்மய பர சிவ தீபா—ப்ரபோ

தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உள்ளே 

தேடி கண்டு கொள்ளலாமே

கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய

குன்றென விளங்கும் பெம்மானே—ப்ரபோ

ஞான வைராக்ய விசார சார ஸ்வர

ராகலய நடன பாதா

நாம பஜன குண கீர்த்தன நவவித

நாயக ஜெய ஜெகந்நாதா–ப்ரபோ

பார்வதி பாலா அபார வார வர

பரம பகவ பவ தரணா

பக்த ஜன சுமுக ப்ரவண விநாயக

பாவன பரிமள சரணா–ப்ரபோ

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 18

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.