(Reading time: 6 - 11 minutes)
Vinayagar chadurthi

சென்ற பிரம்மனை, திரும்பி வரும்போது தடுத்துச் சிறையெடுத்தார் விநாயகர். அதனால் படைப்புத் தொழில் பாதிக்கப்படவே, அவரின் கோபத்தை தணிக்கும் பொருட்டு பிரம்மதேவன் கைகளால் தலையைக் குட்டிகொள்ளவும், இரண்டு காதுகளையும் பிடித்து உட்கார்ந்து எழுந்தும் செய்யவே, விநாயகர் கோபம் தணிந்து அவரை விடுதலை செய்தார். அன்று முதல் விநயாகர் குட்டு, தோப்புக்கரணம் இரண்டும் அவரை வழிபடும் முறைகளாக பின்பற்றப்பட்டது.

விக்னங்களை களைபவன் விநாயகன். வியாசர் சொல்லச் சொல்ல மகாபாரதம் எழுதுவதற்காக தன்னுடைய ஒரு பக்கத் தந்தத்தை உடைத்து, மகாபாரதம் எழுதினர். அதனால் அவருக்கு ஏகதந்தன் என்ற பெயரும் உண்டு.

விலங்குகளில் மிகக் கூர்மையானதும், பலமானதும் யானை. அதே சமயம் பழுகுவதற்கும் பார்ப்பதற்கும் இனிமையான மிருகம். அதே போல் விநாயகரும் கூர்மையானவர். அது மட்டுமில்லாமல் அணுகுவதற்கு எளிமையானவன். ஏன் என்றால் அவரின் இருப்பிடம் அரச மரத்தடி. அதனால் வெளியில் போகும் போதும், வரும்போதும் ஹாய் சொல்லிவிட்டுச் செல்லலாம்.

அருகம்புல்லால் விநாயகரை வணங்குவது சிறப்பு. எளிமையான பொருட்கள் கொண்டு விநாயகரை எளிதாக வழிபடலாம். எருக்கம்பூ, அருகம்புல் போன்றவையே அவரை அலங்கரிக்கவும், ஆராதிக்கவும் போதும்.

களிமண்ணில் விநயாகர் சிலை செய்து ஒன்றரை நாள் முதல் பதினொரு நாட்கள் வரை வீட்டில் வைத்து வழிபட்டுப் பின் நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் தென்மேற்கு பகுதிகளில் பரவலாக உள்ளது.

பெரும்பாலும் அவரை பிரம்மசாரியாகவும், சில இடங்களில் மட்டும் சித்தி , புத்தி என்ற மனைவிகளோடும் விநாயகரை வணங்குகிறோம்.

தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி பிள்ளையாரும், திருச்சி உச்சிப்பிள்ளயாரும் அனைவருக்கும் தெரியும். எனக்குப் பிடித்த விநாயகர் வரத விநாயகர். வேண்டியதைக் கொடுக்கும் விநாயகர்.

இந்தியா மட்டுமல்ல, நேபாளம், ஜப்பான், திபெத் , இந்தோனேஷியா நாடுகளிலும் விநயாகர் வழிபாடு நடக்கின்றது. சமீபத்தில் அரேபிய தேசம் ஒன்றில் கூட விநாயகர் உருவ பாறை சிற்பம் கிடைக்கத்ததாக தகவல் வெளியானது.

ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் அவதார நாளாகக் கொண்டாடுகிறோம். அவரை நாம் கீதத்திலும் வழிபடலாம் என்பதால் இன்றைக்கு பிரபோ கணபதே என்ற பாடலைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். அவரின் குரு அகத்தியர். அந்த அகத்திய

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.