(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 29 - கற்றாழையின் (லோ வேரா) மேஜிக்!

லோ வேரா என்றைழைக்கப்படும் கற்றாழை ஒரு மிக சிறந்த அழகு சாதனம்!

கற்றாழையில் வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்திருக்கிறது. எனவே இது பல விதங்களில் உங்களுக்கு நல்லது செய்யக் கூடியது.

 

சருமத்திற்கு:

ழகான மற்றும் மென்மையான சருமத்திற்கு, அலோ வேரா ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துங்கள்.

அதேப்போல வெயிலில் சென்று வந்து உங்களின் சரும நிறம் மாறி இருந்தாலும், உங்களுடைய நிஜ நிறத்தை மீண்டும் பெற இது உதவும்.

உடலில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்களை போக்கவும் கற்றாழை சிறந்த ஒன்று!

 

இந்த கற்றாழை ஃபேஸ்பேக் செய்வது மிகவும் எளிதானது.

ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல், சில துளிகள் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் இன்ஸ்டன்ட் ஓட்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

(ஓட்ஸ் சருமத்தில் எளிதில் பூசக்கூடிய பேஸ்ட்டை உருவாக்க உதவும்)

அனைத்தையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.

 

இதை உங்களின் சருமத்தில் அப்ளை செய்துப் பாருங்கள்!!!

 

கூந்தலுக்கு:

ற்றாழை ஜெல் பயன்படுத்தினால் உங்கள் தலைமுடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

  

அதே நேரம் உங்கள் உச்சந்தலையில் உள்ள பி.எச் சமநிலையை கட்டுக்குள் வைக்கவும் கற்றாழை ஜெல் உதவுகிறது.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.